பக்கம் எண் :

520

பாவ மல்குபூ வுலகுளே மறக்கொடும் பாவர்
தேவ மைந்தனார் சிலுவையி னுகுத்செஞ் சோரி
மேவு புண்ணிய வசத்திலிவ் வீட்டுல கடைந்தேம்
ஜீவ நாயகற் றொழும்பரேந் திருக்கடை திறமின்.

84
 
முத்தி சாதன மாகிய சிலுவையின் மூர்த்தம்
மத்த கத்துளே மானுவே லுயிர்கொடுத் தீட்டி
வைத்த மாநிதிக் குரியராய் வகுத்தசா தனமெங்
கைத்த லத்துளேங் காட்டுகேங் கடைதிறந் தருண்மின்.
85
 
                    வேறு.
 
வ்வண்ணம் விதேக முத்த ரிருவரு மிரந்து கூவுஞ்
செவ்வண்ண மறிந்து மோசே யாதியர் சேர்ந்தாங் குய்த்த
கைவண்ணச் சாத்தை யேற்றுக் கருணைவேந் தருக்குக் காட்டி
அவ்வண்ண லழைமி னென்ற வருள்பெற்று மீண்ட வொல்லை.
86
என்மனோ ரதரா யென்று மிதயபீ டத்து மேய
தன்மராங் கிறிஸதி யேசுசாமிசா மீப மாக
நன்மைசால் மெய்விஸ் வாச நராத்தும ஜீவர்க் குய்த்த
ஜென்மசா பலிய முத்தித் திருக்கடை திறந்த தம்மா.
87
 
முத்திமா நகர வாயின் முகப்புவே தியருக் காக
வித்தகக் கபாடம் வல்லே திறவுண்ட விதத்தை யோரிற்
சித்தமுள் ளுவந்து ஜேசுதிருவடிக் கன்பு செய்யும்
பத்திமை யல்லால் வேறு பரமசம் பத்தொன் றுண்டோ.
88
 
எண்ணரும் பரம சேனை யெதிர்கொண்டிங் கணைமி னென்னப்
பண்ணவர் குழுமி வாழ்த்தப் பராபரன் புதல்வ னீந்த
புண்ணியங் கைமா றில்லாப் புண்ணியம் புண்ய மென்னா
விண்ணவர்க் கரசை யேத்தி வேதிய ரகத்துட் புக்கார்.
89
 
ஆயிடை யடுத்தா னாக வறீவீன னவனைப் பற்றித்
தூயசின் னங்கள் யாது மிலனெனத் துணிந்தவ் வொல்லை
சேயுயர் முகப்பி னின்றுஞ் சீத்திருட் சிறையி லுய்த்தார்
வாயில்காப் பாள ரந்தோ மதியற்றார் கதியற் றாரே.
90
 
சொன்மதி தெருளான் றொல்லைத் துராகார மொருவா னாய
துன்மதி யந்த காரச் சூழலை யடையப் பொற்றான்
பொன்மதி புகட்டி யுய்க்கும்புங்கவர் வேத போத
நன்மதி படைத்தார் நித்ய நலந்தரு நகருட் புக்கார்.
91