| |
அகம்புகும்
பேறுபெற்ற வருமறை யவர்சீர் தேரில்
ஜெகம்படு செல்வ மாதி சிற்றின்ப நுகர்ச்சிக் கெல்லாம்
முகங்கொடா ராகித் தம்மான் மொழிவழி முறையிற்பற்றி
இகம்படு தொல்லை நீத்திங் கீறில்பே ரின்பத் துற்றார்.
|
92 |
| |
|
|
| |
எத்தனை
துன்பந் துக்க மெத்தனை புண்ணீர் கண்ணீர்
எத்தனை நிந்தை லஜ்ஜை யெத்தனை மோச நாசம்
எத்தனை சிறைய பாய மெத்தனை பயங்க ரங்கள்
அத்தனை யும்மின் றாக்கி வீடுய்த்த தருளி னாக்கம்.
|
93 |
| |
|
|
| |
உய்த்ததிங்
கொன்றோ மேன்மே லுவகைபே ரின்ப போகம்
நித்திய ஜீவநன்மை நிறைபரி சுத்த நெஞ்சம்
வித்தக விமல நேசம் மேதக்க தத்து வங்கள்
இத்தனை நலமு நல்கிற் றிறையவ னருளி னாக்கம்.
|
94 |
| |
|
|
| |
பொங்கிரும்
ஜோதி பூத்த பொன்னகர்ப் பரப்பி லெங்கும்
மங்கல மதுர கீத மலிந்தவா னகமு ழக்கம்
எங்கணும் பொதுளத் தாக்கி யிரட்டின வெதிர்கொண் டேற்ற
அங்கண்வா னகத்துச் சேனை யார்ப்பொலி கெழுமி ற்றன்றே.
|
95 |
| |
|
|
| |
பொன்னக
ரத்து வாணர் யாவரு மகிழ்ச்சி பூத்து
மன்னில வுலகி னின்றிம் மாந்தரை வழிந டாத்தி
உன்னத பரமா காயத் துச்சியிற் றிகழ்த்திக் காட்டுந்
தன்னிக ராய வேந்தைத் தனித்தனி பரவி னாரால்.
|
96 |
| |
|
|
| |
புக்கவ
ரனந்த ரந்தம் புண்ணியப் பொருளைப் போற்றி
மிக்குறு பரமா னந்த விம்மித ராகி யேத்திப்
பக்குவப் படுநெஞ் சாரப் பல்லாண்டு கூறி வாழ்ந்தித்
தொக்கவிண் ணவர்க்குஞ் செய்தா ரஞ்சலி முறையிற் றுயோர்.
|
97 |
| |
|
|
| |
புரவுநூ
னெறியிற் சென்று புண்ணிய கதியிற் புக்க
உரவினா ருருவ மாறி யொளிதிகழ் மேனி வாய்ப்ப
இரவியிற் சுடருந் தூய விலங்கெழின் முகத்த ராகிப்
பரவிநின் றேத்தி யேத்திப் பண்ணவ ரோடு செல்வார்.
|
98 |
| |
|
|
| |
அம்பர
லோக ராஜ னருட்டிரு முன்பு நின்றிங்
கும்பரோர் சிலர்வந் தூன்றி யுத்தம கிறிஸ்த வற்கும்
நம்பிக்கை யென்னுநாம நலந்திகழ் மொய்ம்பி னாற்கும்
பைம்பொனி னாடை சார்த்திப் பன்மணிக் கலன்கள் பூட்டி.
|
99
|