கண்கவர்
வனப்பி னாய காட்சிகண் டதிச யிப்பர்
பண்கவர் மிதுன கீதப் பாட்டொலி செவிம டுப்பர்
விண்கவ ருலகைத் தந்த விந்தையை வியந்து பேசி
எண்கவ ரரசைப் போற்றி யிறைஞ்சிவாழ்த் தெடுப்பர் மன்னோ.
|
18 |
|
|
மருமலி துணர்ப்பூஞ்
சோலை மாநிலக் கிழவர் தம்மைப்
பருவர லணுகு றாமே பாலிக்குங் கருணைத் தாய்போல்
கருவிழிக் கிமைபோ லன்பிற் கங்குலும் பகலுங் காத்துத்
திருவருட் கடவுள் வேந்தன் ஜெகதலம் புரக்குங் காலை.
|
19 |
|
|
சிருஷ்டிப்படலம்
முற்றிற்று.
|
|
|
|
|
|
|
|
நித்திய
ராஜ ரீக நிலவுவா னகத்தி லென்றும்
பத்தியாய்ப் பணிசெய் துற்ற பண்ணவர் குழாத்து ணின்றும்
சத்துரு வாகிக் கீழே தள்ளுண்டு கிடந்து பேயால்
மித்திர பேத மென்னும் வினையிடை முளைத்த தந்தோ.
|
1 |
|
|
விள்ளரு
மரச னீதி விலக்கலால் மலபரு தாலத்
தள்ளுண்டு கிடந்த பேயி னதிபதி யழிம்ப
னென்னுங் கள்ளனுள் ளழன்று சீறிக் காசினி ககன வட்டத்
துள்ளுறு மரபை யோர்ந்தங் குசாவின னுருவ மாறி.
|
2 |
|
|
கண்டன னென்ப
மன்னோ கருணையங் கடல்வ ளாகத்
தொண்டிறல் படைத்த கோமா னொருதனித் திகிரி யுய்த்த
மண்டலப் பரப்பைச் சூழ்ந்த வாரிதிப் பெருக்கை வார்ந்த
தண்டலைப் பொழிலைப் பாயுந் தடநதி வளத்தை யெல்லாம்.
|
3 |
|
|
இடந்தொறுஞ்
சென்று நோக்கி யிப்பெரும் போகந் துய்ப்பான்
மடங்கலே றனையார் தம்மை வஞ்சத்தா லடர்த்திவ் வையம்
அடங்கலு மடிப்படுத்தி யரசியல் புரிவ லென்னா
விடங்கிள ரரவிற் புக்கான் மேதையா ரிருந்த சூழல்.
|
4 |
|
|
பேயகம்
புகுந்த போதே பிரபஞ்ச மென்னு நாமம்
ஆயது சமயந் தேடி யரிவையை மதிம ருட்டி
நாயகன் றனையு மந்த நாரியைக் கொண்டே மாற்றிச்
சேயுய ரிறைவ னாணை செகுக்கவுஞ் செய்தான் பாவி.
|
5 |