|
தன்னையே
கெடுத்தான் முன்னந் தற்பெரு மையினா லந்தோ
பின்னையும் பொறாமை யாலே பிறரையுங் கெடுத்தான் வாளா
மன்னுயிர்த் தொகுதி கும்பி மலக்கிடங் களைய வைத்தான்
என்னையீ தென்னை யென்கே னிருநிலத் திறுக்க கேட்டை.
|
6 |
|
|
|
|
தன்னொரு
மகவைத் தந்த தற்பிர னன்பு வாழி
பொன்னுல கிழிந்து வந்த புண்ணியம் வாழி வாழி
மன்னுயிர் புரக்க வந்த மனுமகன் சரணம் வாழி
என்னையிந் நிலைபா லிக்கு மெம்பிரான் கிருபை வாழி.
|
7 |
|
|
|
|
கற்பனை
கடந்த போதே கற்பனை கடந்து நின்ற
தற்பர னீதி பொங்கித் தழலெழச் சினவி நீட
அற்புத கருணை பொங்கி யாரழ லவிக்க நாடப்
பொற்புறு குமா னேர்ந்து நடுவராய்ப் புகல லுற்றார்.
|
8 |
|
|
|
|
மற்றிம்மா
னிடங்க ளெந்தாய் வஞ்சக வலகை யேய்த்த
சொற்றலை நின்று ராஜ துரோகியா யினரவ் வெல்லாக்
குற்றமுந் தண்டம் யாவுங் குறிக்கொண்டுத் தரிப்பல் யானே
நற்றச விதிகைக் கொண்டிங் கீட்டுவல் நலங்கொ ணீதி.
|
9 |
|
|
|
|
நிண்ணய
மிதனை யோர்ந்து நிரையபா தலத்துக் கேகும்
மண்ணுல கரைமன் னித்து ரக்ஷணை வழங்கிக் காத்துத்
தண்ணளி புரிக யானே தராதலத் திழிந்தங் கீட்டும்
புண்ணிய பலத்தா லீதென் பொருத்தனை யாகு மைய.
|
10 |
|
|
|
|
குருதியைக்
கொடுத்து ஜீவ கோடியை மீட்ப லென்ன
ஒருதிருக் குமர னன்பி னுரைதிருச் செவியிற் சாரக்
கருதருங் கடவுள் வேந்தன் கருணையாற் கருணை மைந்தன்
திருவுள மாக வென்று செப்பிமற் றிதனைச் செய்தார்.
|
11 |
|
|
|
|
வானகத்
தரசன் றம்போல் வையகத் தரசு செய்வான்
தானென வுதித்த மைந்தன் றனைத்தனி மௌலிசூட்டி
ஞானமுத் திரையு நல்கி நனிதவ வுயர்த்தி வைத்தார்
மானிடம் புரந்து பேயின் வன்றலை சிதைக்க வென்றே.
|
12 |
|
|
|
|
சற்பனைப்
பேச்சை நம்பிச் சதிவழி புகுந்து மக்காள்
கற்பிள வொத்தீ ரந்தோ கடுகிய மரண வாற்றின்
வற்புறு திரையின் மூழ்கி மாண்டுட வழிவீ ரென்றார்
தற்பத மிழந்த மாந்தர் தலையிழி சிகையே யன்றோ.
|
13 |