பக்கம் எண் :

54

சாமித்து ரோகஞ் செய்யத் தகுங்கரு விகளை மண்ணில்
சேமித்து நம்மோர் மைந்தன் றிருவடித் தொழும்பு பட்டு
நேமித்த நெறியைப் பற்றி நித்திய ஜீவ நாட்டைக்
காமித்து வம்மின் றாழ்க்கிற் கைவரு மோச நாசம்.   

14
 

மித்திர நலத்தை வீசி விதிவிலக் கெறிந் தெமக்குச்
சத்துரு வாகி னீர்நுந் தரிப்பிணி நாச தேசம்
நித்திய ஜீவ நாட்டி னெறிகடைப் பிடியீ ராயில்
அத்தலங் கோபத் தீயி லவிவது சரத மென்னா.      

15
 

சாதனம் விளங்கத் தீட்டித் தரணியிற் காலந் தோறும்
மேதகை யவரைக் கொண்டு விளம்பரப் படுத்தச் செய்தார்
நீதியா யகண்டா கார நிறைந்தபே ரருளா யென்றும்
பேதியா நிருவி காரப் பெருந்தகை பரம ராஜன்.

16
 

         இராஜ துரோகப்படலம் முற்றிற்று.

 
 
8. பூர்வ பாதைப்படலம்
 
 

புனித சேத்திரத் தமர்ந்துள பூருவ குடிகள்
கனிதந் தாக்கிய தீவினை யாமெனக் கலித்து
மனித மாட்சியை வரைந்தல கைக்குண மருவி
நனிதி ரிந்தனர் விலங்கென நாசதே சத்தில்.

1
 

ஐந்தெ னும்பொறி புலனந்தக் கரணமாத் துமஞ்சேர்ந்
திந்த மானிடப் பிறப்புமெந் நலங்களு மியைந்தும்
பந்த மாங்கனி யாலந்த நலமெலாம் பறிபோய்த்
தொந்த மாம்பெருங் கேட்டொடு மரணமுஞ் சூழ்ந்த.  

2
 

உறைக லந்துதீஞ் சுவையபா லொருங்கறக் கெடல்போல்
முறையி னீங்கிய கனிச்சுவை யுலகெலா முயங்கிக்
கறையி னாக்கிலெம் மரணத்தின் கரையறு துன்பச்
சிறையி னுய்த்தது ஜென்மசஞ் சிதத்தொடு செறிந்து.

3

பாவ காரியர் திசைதொறுங் குழுமினர் பரம்பி
ஈவி ரக்கமி லிராக்ஷத ரெனப்பெய ரெடுத்துத்
தீவி னைக்குநட் பாளராய்ச் செருமினர்க் குள்ளுந்
தேவ புத்திர ராயினர் சிலரருட் செயலால். 

4