|
சேற்றிற்
றாமரை முளைத்தெனச் சிப்பியி னின்று
தோற்று வெண்டா ளம்மெனத் தொடுநிலக் கரியில்
ஆற்றல் சாலொளி வைரம்வந் தெனவுவ ரளற்றில்
ஊற்றின் னீர்சுரந் தெனவவட் டோன்றின ருரவோர்.
|
5 |
|
|
|
|
மூன்றொன்
றாகிய முதலர சாட்சியின் முறையை
ஆன்ற வுண்மையைத் தருமத்தை யவனிக்கு விளக்கிச்
சான்று ரைத்துவா னகர்வழி சமைத்திட ஜகத்தில்
தோன்றிற் றாலொரு திருச்சபை துலங்குவெண் பிறைபோல்.
|
6 |
|
|
|
|
ஆலம்
வித்தினி லங்குரித் தறுகில்வே ரூன்றிக்
கோலி யெங்கணுந் தண்ணிழல் கொளுவிவிண் குலவிச்
சால வெவ்விடாய் தணித்துமேன் மேலுறத் தழைத்து
வேலை ஞாலத்தைப் போர்த்தது திருச்சபை விருக்கம்.
|
7 |
|
|
|
|
இருள
றுத்தொளி பரப்பியுள் ளகம்புற மெங்கும்
பொருள்வி ளக்கிமோ சம்புகா வகைபுறங் காத்து
மருள கற்றிநூல் வழிதெரித் தென்றும்வா டாது
தெருள ளித்தொளி கிளைத்தது திருச்சபைத் தீபம்.
|
8 |
|
|
|
|
சத்தி
யந்திக ழித்தகு திருச்சபைத் தலைவர்
நித்தி யானந்த ராஜ்ஜிய நிருமல வரசன்
புத்தி ரோத்தம புண்ணியர் புநருல கத்து
மத்தி யஸ்தராய் நடுப்புரி மானுவே லாமால்.
|
9 |
|
|
|
|
பாவ
மல்கிய நாசதே சத்துவெம் பரப்பில்
ஜீவ ரக்ஷணை விரும்பியோர் திவ்விய நகர்க்குப்
போவ தாகிய பூருவ பாதையைப் புனையத்
தேவ வுத்தரம் பெற்றனர் திருச்சபைக் குரவர்.
|
10 |
|
|
|
|
மேலை
நாண்முதல் மேசியா திருவவ தாரக்
கால மட்டுமங் கங்குதோன் றியநமர் கருதிச்
சால நேர்பிடித் திறைதிரு வுளப்படி சமைத்து
வேலை ஞாலத்து விளக்கிய பாதையை விரிக்கில்.
|
11 |
|
|
|
|
ஒற்றை
யேவழி யோரடித் தடமுடைத் தும்பர்க்
கொற்ற வன்றிரு நகர்செலக் குறித்தது கோணல்
அற்ற நேர்வழி யயலடி பிசகுறி னந்தோ
துற்று காரிருட் சூழலுய்த் திடுமிது துணிபே.
|
12 |