பக்கம் எண் :

56

 

திருத்த குங்கடை வாயிலின் செவ்விசேர் முகப்பில்
விருத்த சேதனக் குறியுடைத் தாங்கதை விடுக்கில்
கருத்தன் மாளிகைத் தலந்தொறும் பலிகளுங் கணிப்பில்
பொருத்த னைப்பொருட் குவைகளும் வயின்றொறும் பொலிவ.

13
   
 

ஆய வவ்வழிப் போக்கருக் குரியவா சாரம்
மேய பல்வகைச் சடங்குகள் விரதங்கள் முதலா
ஏய வன்பெருஞ் சுமைசுமத் திடுவதங் கிளைக்கிற்
காயுந் தண்டனைப் படுத்துவ தின்றுகண் ணோட்டம்.

14
   
 

ஐய னெங்கிறிஸ் தியேசுவின் முன்னடை யாளச்
செய்ய சோரியும் பற்பல பொருள்களுந் தெருளக்
கைபு னைந்தமை யிடைக்கிடை கவினவக் காட்சி
துய்ய நூல்வழிப் போக்கருக் ககமகிழ் தொகுக்கும்.

15
   
 

இரவி லக்கினித் தூணமுண் டெற்சுடு வெயிற்குப்
பரவி நின்றுமே கந்தரு நிழலுண்டு பசிக்கில்
தரமன் னாவுண்டு தாகிக்கி னீர்தரத் தக்க
உரவு கோலுண்டு நம்பிரான் றயையென்று முண்டால்.

16
   
 

இனைய நூல்வழிப் போக்கருக் கிகபரத் திறையாம்
முனைவன் றாதையிற் கடிந்துதாய் முறைமையிற் றாங்கித்
தனைய ராய்வழி நடத்தியா தரித்தனர் சாவின்
பினைய ளித்தனர் தம்பதத் துளபெரும் பேறு.

17
   
 

அண்ணல் வானகத் தரசனா திச்சபை யடியார்
விண்ணி னாக்கிய விளம்பரத் தொனிசெவி மடுத்துக்
கண்ணில் பேய்க்கணத் தலைமகன் கையகன் றோடிப்
புண்ணி யன்றினிக் கோற்குடி யாயினர் பொருந்தி.

18
   
 

முந்து தந்தைதாய் தம்பிரான் விதியினை முரணி
நொந்து ளங்கசந் தழுதிந்தப் பாதையை நுதலிப்
பந்த பாசங்க ளறவெறிந் திரக்ஷகற் பழிச்சிச்
சிந்த னாதித தேவர்கோன் றிருநக ரடைந்தார்.

19
 
 

பண்டிந் நூனெறி பற்றியா பேலெனப் பகருந்
தொண்டன் மெய்ப்பொரு ளுணர்ந்துதூப் பலிமுறை தூவி
எண்ட குங்குரு திக்கரி யாயுயி ரினிதீந்
தண்டர் கோன்பத மடைந்தனன் பாருல கறிய.

20