பக்கம் எண் :

57

 

எஞ்சு றாவிசு வாசியே னோக்குயாத் திரையில்
அஞ்ச லென்றடுத் திராப்பக லவனொடிவ் வழியிற்
சஞ்ச ரித்தனர் தம்பிரான் சாவுமின் றாகச்
செஞ்செ வேகொடு போயினர் திருநகர்க் கவனை.

21
     
 

பாதை பற்றிநின் றுலகருக் குணர்த்திய பழுதில்
நீதி மான்பண்டு நிமிர்பிர ளயத்தைமேற் கொண்டு
வேத ராஜ்ஜிய தருமத்தை வியனிலத் தூன்றிக்
காத லித்தவா னடைந்தனன் மரணத்தைக் கடந்து.

22
     
 

செல்லென் றாண்டகை திகழ்த்திய செம்மொழி செவியிற்
புல்ல வக்கணத் தூருற வுரிமையைப் போக்கி
நல்ல நூனெறி கடைப்பிடித் தெமரெலா நயக்கும்
மல்லல் கூர்விசு வாசியின் யாத்திரை வகுக்கில்.

23
     
 

தம்பி ரானுரை தலைக்கொடு தரணிசெல் மார்க்க
வெம்பு தீவிடப் பாந்தளை வெரீ இயிரிந் தோடி
உம்பர் நூனெறித் திருக்கடை வாயில்புக் குட்போய்ச்
செம்பு னற்பலி யங்கங்கு திருத்தினன் செய்யோன்.

24
     
 

புரவு நூனெறிக் கிடையிடை புண்ணியம் பொதிந்து
விரவு முற்குறி வயின்றொறு மிளிர்வன கண்டு
கரவி லாதமெய் யுரவிசு வாசமுட் கவினிப்
பரவி யேகினான் பகைப்புல மிடைந்தவோர் படுகர்.

25
     
 

அருளி னாலெதிர்த் தலகையின் சேனையை யடர்த்து
மருளி மாக்களோ ரைவரை வெந்நிட மடக்கி
இருள றுத்தொளிர் சுடரென விகல்கடந் தபிராம்
பொருள்ப டைத்தொரு தனதனாய் நெறிக்கொடு போனான்.

26
     
 

சோலை மாநிலந் துருவிநூ னெறியினைத் தொடர்ந்து
மேலை யோர்விதி விலக்கநுட் டித்துவிண் ணாடிப்
பாலை நீத்துவந் தடைந்தனன் சோதனைப் பரப்பை
வேலை சூழுல கேத்துமோர் மெய்விசு வாசி.

27
     
 

பெரிய நாயகன் றிருவுளப் படியொரு பேறாம்
அரிய மைந்தனை மகப்பலி யூட்டிட வலங்கு
சுரிகை யோங்கலுந் துணித்திடா யுன்விசு வாசந்
தெரியச் செய்தன மெனவிண்ணிற் சிறந்ததோர் திருச்சொல்.

28