|
தீர்க்க
மெய்விசு வாசத்தின் செயலெலாந் தெரிந்தும்
பார்த்தி வற்குமெய்ப் பத்திசெய் பரிசினைப் பார்த்தும்
ஆர்த்தி யிற்பல வாசிகள் வழங்கியங் கவனை
ஊர்த்த லோகத்திற் புகுத்தின ருன்னதத் தரசன்.
|
29 |
|
|
|
|
பூர்வ
பாதையைத் துலக்கிவை திகமுறை புதுக்கி
ஆர்வ மிக்குநன் னெறிப்படு வோர்சுமக் கரிய
தீர்வ ருஞ்சுமை யேற்றிய திருவிதிக் கிழவன்
சீர்வ லந்திகழ் யாத்திரை வரன்முறை தெரிக்கில்.
|
30 |
|
|
|
|
நாச
தேசத்து ராஜ்ஜிய பாரத்தை நச்சான்
ஈசன் மார்க்கத்தன் னினத்தொடு நல்குர வெய்தித்
தேச நாசத்துக் ககறலே நலனெனத் தெரிந்தான்
ஆசி லாத்திருக் கடைபுகூஉ வறநெறி பிடித்தான்.
|
31 |
|
|
|
|
பேயின்
மக்கள்பின் றொடர்ந்திடச் செங்கடல் பிளந்து
வாயி டும்படி கோல்கொடு மடித்தனன் மருங்கைக்
காயும் வெம்மணற் சுரத்திடைத் தவிப்பறக் கடத்தி
நாய கன்வழி நடத்தினன் நாற்பது வருடம்.
|
32 |
|
|
|
|
வழிம
றித்தெதிர்த் தடர்த்தமர் மலைந்தமன் னரையும்
கழிபெ ரும்படைத் திரளையுங் கட்டறுத் தோட்டி
பழிப டாமற்றன் னினத்தரைத் தினம்பரி பாலித்
தெழுது நூல்வலான் கடைப்பிடித் தேகின னென்ப.
|
33 |
|
|
|
|
ஜீவ
நாளெலாந் திவ்விய நகர்செலும் பாதைக்
காவ தாகிய திருப்பணி விடைபுரிந் தமையத்
தாவில் நல்லறச் சாலைமண் டபஞ்சுமை தாங்கி
பாவ நாசசங் கேதங்க ளமைத்தனன் பனவன்.
|
34 |
|
|
|
|
காண்டி
கான்மிதிப் பாயலை கவின்கொள்கா னானை
ஈண்டென் றாண்டகை யுரைத்தலின் மலைமிசை யேறி
மாண்ட லஞ்செறி வளனெலாங் கண்டுள மகிழ்ந்து
சேண்ட லத்திறை திருநக ரடைந்தனன் றீர்க்கன்.
|
35 |
|
|
|
|
வஞ்சப்
பேயொடு மலைந்தம ராடியு மறிந்த
சஞ்ச லப்பொருப் புச்சிமீ தேறியுந் தணவா
வெஞ்சு ரத்துவீழ்ந் தழன்றும்வெந் நிடாதுமுன் னிட்டுத்
துஞ்சு காறுஞ்சென் றுயர்பத மடைந்தனன் ஜோபு.
|
36 |