|
தொன்று
தொட்டுள திருச்சபைக் குரவருந் துகடீர்
நன்றி கொண்முது தீர்க்கரு நலத்தகு வாணாள்
சென்று போயினர் வருதிறன் றெரிப்பவ ரில்லர்
நின்று போயின வற்புதங் களுநில வுலகில். 1
|
|
|
|
பூர்வ
பாதையை லௌகிகப் பெரும்புதர் புதைப்பத்
தீர்வ ருங்கொடு விலங்குகள் தீவிடப் பாந்தள்
பேர்வு றாதவ ணுறைதலிற் பிறங்குத லின்றித்
தூர்வ தென்றுகண் டாரண ருளந்துளக் குற்றார் 2
|
|
|
|
தீர்க்க
மெய்விசு வாசிகள் தீர்க்கர்சொற் றெருளடோர்
பார்க்கி ரக்ஷணை யீட்டவும் பார்த்திவன் மருமான்
மார்க்க மிங்கிதைப் புதுக்கவும் வருவர்மற் றொனா
கார்க்கு லம்வரக் காண்குறாப் பயிரினுட் கரிவா. 3
|
|
|
|
வள்ள
லாரிளங் கோமகன் வரும்பதி தெரிக்கும்
வெள்ளி யொன்றுள தென்றதை விரும்பினர் நாடி
நள்ளி யோர்சில ரடியுறை நல்லன தெரிந்து
தெள்ளி தோர்ந்தெதிர்ந் திருந்தனர் பூருவ திசையில். 4
|