|
முத்தி
நாட்டர சாதிக்க முறைநனி யுவந்த
பத்த ரேமெனச் செருக்கிய பனவர்மெய் வாழ்வை
நத்தி யன்றிக வாழ்வடை வாமென நம்பிப்
புத்தி ரன்வரு கைக்கெதிர் நோக்கினர் புரத்தில்.
|
5 |
|
|
|
|
மீத
லத்திள வரசனைக் காண்குறும் விரகால்
தீது துற்றிய குணத்தருஞ் சிந்தையுற் றிருப்பச்
சாது மார்க்கத்தர் யாவருந் தம்பிரான் வருகை
காத லித்தனர் விடிவெதிர் கமலமே போல.
|
6 |
|
|
|
|
கனித
ரும்பழ நறைபொழி வளந்திகழ் கானான்
புனித வைப்பினிற் புரவல னொருதிருப் புதல்வன்
மனித தேகத்தில் வருவர்மெய்ம் மனந்திருப் புகவென்
றினிது கூவினன் றீர்க்கர்சொல் லெடுத்தொரு தூதன்.
|
7 |
|
|
|
|
கூறு
கட்டியந் திசைதிசை செவிப்புலங் குறுகத்
தூற டர்ந்தகா னகந்துரீஇத் தூதனை யடுத்துச்
சீறு தீவிடப் பாந்தள்கை திருகியூ தேயர்
பேறு நாடினர் மனந்திருப் பினர்நெறி பிடித்தே.
|
8 |
|
|
|
|
உம்பர்
நோக்கிய மெய்த்திருத் தொண்டருள் ளுவப்பும்
இம்பர் நூனெறி புதையத்தூ நிடர்ந்தெழு மியல்பும்
கும்பி பாகத்தி னதிபதி மறக்கொடுங் கோலும்
அம்ப ராதிபன் றிருவுளத் தெட்டிய வம்மா.
|
9 |
|
|
|
|
மனாதி
தத்துவா தீதரா மகத்துவ வேந்தன்
அநாதி நிண்ணயப் படிதிருக் குமரனுள் ளன்பால்
தனாதி ருங்குவ லயத்தினுக் கிரக்ஷணை சமைப்பல்
எனாது யிர்ப்பலி யீந்தென வேம்பலோ டெழுந்தார்.
|
10 |
|
|
|
|
வான்மு
யங்குபே ரின்பசம் பத்துயர் மகிமை
கோன்மு யங்கிய தைவிக துரைத்தனங் கொற்றம்
மேன்மு யங்கிய வரும்பதம் யாவையும் விடுத்தார்
ஊன்மு யங்கிய வுடலுவந் தெடுத்துல குறுவார்.
|
11 |
|
|
|
|
ஆவன்
மிக்கதம் மொருசுத னரசவை யகன்று
போவ தும்மவர் புரிவதும் பொறுப்பதும் பலியாய்
வீவ துந்திரு வுளத்துணர்ந் தவனிக்கு விடுத்த
தேவ நீதியின் புனிதத்தை யாவரே தெரிப்பார்.
|
12 |