|
கலக
மிட்டல கைத்தொழும் பாயறங் கைவிட்
டுலகை நச்சியிங் குழல்நர கீடத்துக் குயிரீந்
திலகு வான்பத மேற்றவந் திறுத்தநம் மீசன்
அலகில் பேரன்பி னளக்கரை யளந்தறி பவர்யார்.
|
13 |
|
|
|
|
உன்ன
தாதிப னொருசுத னுவரிநீ ருலகப்
புன்ன ரங்களைப் புரப்பலென் றேன்றுபோம் புதுமை
என்ன வென்னவென் றாயிரக் காலெடுத் தேத்திப்
பன்ன ருந்துதி பகர்ந்தனர் வான்கணம் பழிச்சி.
|
14
|
|
|
|
|
ஆழ்ந்த
ஜீவநீர் நதிப்பெருக் கதோமுக மாகித்
தாழ்ந்த பூதலப் படுகரிற் பாய்ந்ததுந் தழைத்துக்
காழ்ந்த நித்திய ஜீவகற் பகச்சினை ககனம்
போழ்ந்து பாருறப் பணிந்தது மெத்தனை புதுமை.
|
15
|
|
|
|
|
வேறு
|
|
|
|
|
|
மையார்கலி
புடைசூழ்புவி வளைதீவினை யிருளும்
பொய்யாரணப் புலையார்திமி ரமுந்தீவிடம் பொதிந்த
பையாடர வின்சீறுவெம் படமுஞ்சிதை வெய்த
மெய்யாரணச் சுடர்மானிட விதயாம்பரம் விளங்க.
|
16 |
|
|
|
|
தருமந்தலை
யெடுக்கப்பட வியிற்சத்தியந் தழைக்க
அருமந்தமெய்ச் சுருதித்தொனி யவனித்தலை சிறப்ப
ஒருமந்தையின் மறியாயருள் ளுவந்தேத்திசை யோங்கத்
திருமந்திர முறைவாழ்த்தொலி ஜெயபேரிகை கறங்க.
|
17 |
|
|
|
|
கள்ளம்புரி
யலகைக்கிறை கைகால்வில விலக்க
உள்ளம்பறை யறையத்திகி லுற்றாருயிர் நடுக்கங்
கொள்ளக்கரி முகங்குப்புறக் கொடுந்தீவினை குலைய
அள்ளிக்கதிர் வீசுஞ்சுட ரருணோதய மிதென.
|
18 |
|
|
|
|
வானோமகி
தலமோசுடர் மதியோவயங் கொளிர்வான்
மீனோவிரி கடலோமழை முகிலோவொரு விதியில்
ஆனாநெறி யமைத்தாக்கிய வகிலாண்டவச் சுதனோர்
ஊனாடிய திருமேனிகொண் டுதித்தாருல குவப்ப.
|
19 |
|
|
|
|
மறையார்த்தது
மறையோதிய வரம்பார்த்தது ஞானத்
துறையார்த்தது சன்மார்க்கமெய்த் துணிபார்த்தது சுகிர்த
நிறையார்த்தது நலமார்த்தது நிலையாயர க்ஷணிய
முறையார்த்தது கதியாக்கமிம் முதுமாநிலத் துறவே.
|
20 |