பக்கம் எண் :

62

   

அந்தோவறக் கொடுந்தீவினைக் கிலக்காகிய வவனி
வெந்தீடழி நரகம்புக விடுகிற்கில னென்னா
நந்தாதிரும் புலைமல்கிய நடலைப்பிர பஞ்சத்
தெந்தாயா சிளங்கோமக னிறுத்தாரிது வென்கொல்.

21
   
  துன்பம்படு துயர்நிந்தனை சுடுசொல்வசை யாதி
தன்பங்குறத் தளராதொரு தலையாப்பிறர் தம்மைப்
பொன்போற்பொதிந் தவரின்னுயிர் புரந்தாதரம் புரிவர்
அன்பின்றலை நின்றோர்செயு மாண்டன்மையி தன்றோ.
22
   
 

           வேறு

தீமுக னுய்த்தவெஞ் சிறைக்குள் ளாயயர்
பாமரத் தூறடர் படுகர் வைப்பிது
கோமகன் சேவடிப் பதுமங் கோத்தலிற்
பூமுக மெனப்பெயர் பொலிந்த தாமரோ.

23
   
  பேயடிப் படுத்திய பிரபஞ் சத்தருக்
காயது குடித்தன மமரர் நாட்டென
நாயக னிறுத்தமை குறித்து நண்பொடு
கூயினர் திசைதிசை குறிக்கொண் டாரணர்.
24
   
  ஆண்டகை வானநாட் டரசன் மைந்தனைக்
காண்டொறுங் காண்டொறுங் களிப்புக் கைமிகத்
தேண்டிர க்ஷணைபுரி திருக்கு மாரனென்
றீண்டினர் புனிதசேத் திரத்தி லெங்குமே.
25
   
  உத்தம நூனெறி யுவந்த தொண்டர்பால்
நித்திய ராஜ்ஜிய நிருப னின்மல
புத்திர னெனவிசு வாசம் பூண்டுமெய்ப்
பத்திசெய் தடித்துணை பரவி நின்றனர்.
26
   
  தீர்த்தனென் றற்புதச் செயலுந் தெய்விக
வார்த்தையு முரைசெய மருண்ட மாந்தரும்
பார்த்தலை யிறுத்தவோர் பரம சற்குரு
மூர்த்தமென் றருள்பெற முடுகிக் கிட்டினார்.
27
 
 

ஆயிடை யருள்விழி பரப்பி யாண்டகை
மாயிரு ஞாலத்து மாந்தர் சீர்மையும்
பேயர சாளுகை நடக்கும் பெற்றியும்
நாயகக் கதிவழி நடப்பி லாமையும்.

28