|
மெய்ப்படு தொண்டர்மின் மினியிற் றோன்றலும்
பொய்ப்படு வேடத்தர் பொலிந்தி லங்கலும்
செய்ப்படு களைமிகத் தேம்பு சாலியை
ஒப்பநின் றுத்தம ரொடுங்கிப் போதலும்.
|
29 |
|
|
|
|
தூயதஞ்
சபைச்சுடர் தூண்டி டாதொளி
தேயுறு சீர்மையுந் தீமை மல்கலும்
மீயுறு ஞானத்தை வெறுத்த கந்தொறும்
மாயவஞ் ஞானத்தை வளர்க்கும் பான்மையும். |
30 |
|
|
|
|
திருவுளத்
துணர்ந்துநெட் டுயிர்த்துச் சிந்தைநைந்
திருவிழி புனல்கொள விரங்கி யெந்தையார்
பொருவருந் திருவருட் புணர்ப்பின் வையகப்
பருவரல் துடைப்பலிப் பருவத் தேயெனா. |
31 |
|
|
|
|
வித்தக
திருச்சபை முறையை மேற்கொண்ட
அத்தலை யோரச ரீரி யார்வநம்
புத்திர னிருவரை போற்றி யுயம்மினென்
றித்தகை வாக்கெழ வெவருங் கேட்டனர். |
32 |
|
|
|
|
மித்தையை
வேரற வீசி மெய்பிடித்
துத்தம திருப்பணி யுஞற்றத் தக்கமெய்ப்
பத்தாபன் னிருவரைத் தெரிந்து பாங்குறச்
சித்தஞ்செய் பணியெலாஞ் செயலிற் காட்டுவார் |
33 |
|
|
|
|
நித்திய
ஜீவராஜ் ஜியத்து நேர்வழி
இத்தகு வனவென வியற்றிக் காட்டுமச்
சத்தியக் குறிபிடித் தவர்க்குச் சாமிபம்
அத்தகு ராஜ்ஜிய மாமென் றாண்டகை. |
34 |
|
|
|
|
கண்டகங்
கடுப்புத ரடர்ந்த கான்வழி
கண்டகங் கடுப்புறக் களைந்து வேரறக்
கண்டகங் கொடுதடிந் தனர்வன் கண்டகன்
கண்டகஞ் சிதைத்தசெங் கமலப் பாதனார். |
35 |
|
|
|
|
ஒப்புர
வாக்கிநூ லொழுங்கி னேருறச்
செப்பனிட் டருளியாத் திரிகர் செவ்வழி
தப்பிடி லதோகதி சார்வ ரென்றயல்
குப்புறா திருசுவர் குயிற்ற வுன்னியே. |
36
|