|
அத்தியை
யடுக்கிமென் றசைசெஞ் சோரியென்
றித்தகு சாந்துகொண் டிசைத்துப் பத்திசெய்
பித்தியீ டேற்றமென் பெயர்பு னைந்துதம்
முத்திரை குயிற்றினர் முறைமை யாலரோ. 37
|
|
|
|
இடந்தொறு
மிடந்தொறு மேர்கொண் மாளிகை
மடம்பல சத்திர மரபி னாக்குவித்
தடங்கலும் பணிபுரி யறவர் தம்மையும்
உடம்படி வாங்கியூ ழியத்தி லுய்த்தனர். 38
|
|
|
|
வழிவிடா
யாற்றிவான் வழிவந் தோருக்கென்
மொழிவழி போனக முறையி னூட்டுமின்
அழவுறா விருநிதி யளித்தும் யாண்டுநீர்
பழிவராக் காமின்மற் றெனவும் பன்னினார். 39 |
|
|
|
தெள்ளிய
நூல்வழிக் கிடையிற் சென்றுசேர்
கள்ளமார்க் கங்களைத் தெரியக் காட்டுகை
ஒள்ளிய தம்பநட் டுண்மை யாத்திரி
எள்ளுறாப் பொன்னெழுத் திலங்கத் தீட்டினார். 40 |
|
|
|
மறைவியாக்
கியானமா ளிகையில் வைதிக
முறையறி வுறுத்தமுற் படுபல் காட்சிகள்
துறைதொறு மமைத்தவை விளக்கிச் சொல்லவோர்
நிறைமொழிக் குரவனை நிருமித் தாரரோ. 41 |
|
|
|
இவ்வுல
குக்கெதி ரிடுக்க வாயில்சேர்
செவ்விய நெறிப்படு திருமு கப்பினில்
ஒளவியப் பகைஞரு மவிக்கொ ணாதவோர்
திவ்விய வொளிக்குறி திகழ்த்தி வைத்தனர். 42 |
|
|
|
மாரணப்
படுகரின் மாயச் சந்தையின்
பாரிடச் சூழலின் மோசப் பாங்கரிற்
கோரணி முயங்குறிற் குறிக்கொண் டொல்லையெம்
ஆரண ருடனமர்ந் தருடும் யாமென்றார். 43 |
|
|
|
மாசில்சீர்
மாண்சுவி சேஷ மார்க்கத்தை
ஆசற விளக்கிப்பின் னலகை யீட்டிய
பாசறைப் படைஞரைப் பரிவிற் பார்த்தருள்
நேசமோ டழைத்திவை நிகழ்த்தன் மேயினார். 44
|