|
பண்ணவர்
குழுமிய பரம ராஜ்ஜியம்
கண்ணிய பெருவளங் கைக்குள் ளாயதால்
எண்ணமென் னிடர்க்கடல் வளாகத் தேக்குறும்
மண்ணுளீர் தாழ்ப்பதென் மனந்தி ரும்புமின். 45
|
|
|
|
வித்தகந்
தயைபொறை விநயந் தண்ணளி
சத்தியம் புனிதமெய்த் தருமம் பத்தியென்
றித்தகு சீலர்நட் பினிதி னாற்றிநீர்
உத்தம வழித்துணை யாக்கொண் டோடுமின். 46 |
|
|
|
ஆவியி
லெளியவ ரடைவர் வான்கதி
மேவருந் துயருறின் மேவு மாறுதல்
தாவருஞ் சாந்தருக் குலகந் தம்வசம்
ஈவிரக் கம்முளார்க் கிரக்கங் கிட்டுமால். 47 |
|
|
|
நீதியைப்
பசித்தவர் நிறையத் தேக்குவர்
ஏதமில் தூயர்கண் டடைவ ரீசனை
பேதமற் றைக்கியம் பிறங்கச் செய்குநர்
காதலர் கடவுள்வேந் தருக்குக் காண்மினோ. 48 |
|
|
|
நீக்கமி
னீதியி னிமித்தந் துன்புறில்
மேக்குயர் வானநாட் டின்ப மேவுவார்
மீக்கிளந் தவரெலாம் விபுத நாட்டுள
பாக்கிய மடைந்துயும் பவித்தி ரான்மிகள். 49 |
|
|
|
வேறு
அம்ப ராதிப
னும்பிதா வவரரு ணன்மை
இம்பர் நல்லர்பொல் லாருக்கு மியைவன கண்டீர்
தம்பி ரானென நீயிருஞ் சற்குணந் தழுவி
வெம்பு தீமைக்கு நன்மையே விருப்பொடு விளைமின். 50
|
|
|
|
ஈர
நீருல கத்தினுக் குப்பென வியைவீர்
சோர விட்டிடா துலகரைத் தூயநல் லொழுக்கால்
சார மேற்றுமி னன்றெனிற் றள்ளுண்டு மிதிபட்
டாரும் வையகத் தவமதிப் படைவிரீ தறிமின். 51 |
|
|
|
உலகி
னுக்கொளி நீயிரும் முத்தம கிரியை
இலகு மென்னிலங் கவரகத் திருளிரிந் தோடும்
விலகி வில்லிடு மொளியையுள் ளடக்கிமேன் மூடில
அலக றுஞ்சுட ராற்பயன் பிறிதுள வாங்கொல். 52
|