|
கொலைசெய்
யற்கவென் றுரைத்தகற் பனையுண்மை குணிக்கில்
புலைசெய் கோபமு மிகழ்ச்சியும் பிறர்நெஞ்சு புண்பட்
டுலைய மீப்படிற் கொலையுமா மாதலி னுடையார்
நிலைமை யாமெரி நரகபா தலமென நினைமின். 53 |
|
|
|
விபச
ரித்திடா யென்பது விதியதை விரிக்கில்
தபசி யேனுமற் றொருத்திபா லிச்சையுட் டரிக்கில்
அபச ரித்தனா மாக்கினை யடைந்தன னவனை
உபச ரிப்பதும் நரகபா தலமென வுணர்மின். 54 |
|
|
|
உள்ள
தையுள தென்றுரை யாடுமி னிலதை
விள்ளு மின்னில தேயென விதனின்மேற் பட்ட
கள்ள வாசகம் யாவையுங் கருதருந் தீங்கென்
றெள்ளு மின்சுவி சேஷமார்க் கத்தியல் பிதுவே. 55 |
|
|
|
திருகை
ஞாலத்துப் புகழ்பெறச் செயுந்தரு மத்தில்
வருகை யொன்றிலை மறுமையிற் புகழ்மதி யாதிங்
கொருகை செய்வதை மறுகையுற் றறிகிலா துஞற்றில்
பெருக மாண்பய னளிப்பர்நும் பிதாவுள மகிழ்ந்தே. 56 |
|
|
|
துறைதொ
றும்புகழ் நச்சிவீண் மொழிகளைத் தொகுத்துப்
பறைய றைந்தெனப் புரிஜெபம் பயன்படா தென்றும்
அறையி லந்தரங் கத்திலே சந்நிதி யடுத்துக்
குறையி ரந்துமன் றாடுமி னருள்வர்நங் கோமான். 57 |
|
|
|
செறுத்து
மக்குமற் றவர்செயுந் தீமையைச் சிந்தை
நிறுத்தி டாதுமன் னிப்பிரேல் நீர்செய்தீ மைகளும்
பொறுத்து மக்குமன் னித்தருள் புரிவர்பூ தலமுற்
றொறுத்தி டற்கதி காரியா முன்னதத் தரசன். 58 |
|
|
|
உரிய
மாநிதி துறுமிடத் துறுமும திதயம்
அரிய வானிதித் திரட்கரு வூலத்தை யாக்கித்
துரிய பூமியிற் றொகுமினோ பூச்சியுந் துருவும்
திரியுஞ் சோரரு யில்லையப் புனிதசேத் திரத்தில். 59 |
|
|
|
ஒருவ
னூழிய மிரண்டிய மாநருக் குஞற்றில்
ஒருவ னட்பொரு வன்பகை யாமுல கியற்கை
ஒருவு மின்னுல கூழிய மூர்த்தநாட் டரசன்
ஒருவர்க் கேயினி தூழியஞ் செய்மினுள் ளுவந்து. 60 |