| |
வித்தி
டாபயிர் விளைத்திடா விளைந்தவை சேர்த்து
வைத்தி டாவொரு களஞ்சியத் தெனினும்வான் பறவைக்
கத்த னார்பரிந் தெத்தனை யாவுண வளித்து
நித்த மும்பரி பாலனஞ் செயுமரு ணினைமின். 61 |
| |
|
| |
கான
மல்குபூ மலர்க்குலங் கவின்பெறு காட்சி
ஞான நாயகன் றொழிலலால் நவிலமற் றில்லை
மேன லம்பெறு சாலமோன் வேந்துமவ் விதத்தில்
தான ணிந்துடை தரித்தில னாலிந்த ஜகத்தில். 62 |
| |
|
| |
சொன்ன
மற்றிவை துணிந்துநீர் யாமெதைத் துய்த்தும்
இந்நி லத்தெதை யுடுத்துமென் றேக்குறா திருமின்
பொன்னி லத்தர சன்பிதா வாதலிற் புதல்வீர்
நன்ன லத்தவூ ணுடைதெரிந் தளிப்பாநா ணாளும். 63 |
| |
|
| |
அழிவி
லாப்பர லோகவாழ் வொன்றையே யவாவி
ஒழிவி லாதுளங் கவலுமின் முயலுமி னுண்மை
வழிவி டாதுநே ரோடுமின் மற்றவை யெல்லாம்
பழிப டாதுமகீ கருளுவ ருன்னத பரமன். 64 |
| |
|
| |
உற்று
நோக்கியுன் கண்ணுறு முத்திர மொழித்த
பிற்றை யந்நியன் கட்டுரும் பெடுத்தெறி பெற்றி
தெற்றென் றோர்வையீ தன்றிநீ பிறர்பிழை தெரிந்துன்
குற்ற முள்ளுறப் புதைத்திடல் கொடியமா மாயம். 65 |
| |
|
| |
எந்த
நீதியிற் பிறர்குற்றங் கண்டுதீர்ப் பிடுதிர்
அந்த நீதியி னுங்குற்றங் கண்டுதீர்ப் படைவீர்
எந்த வாறெந்த நாழியிற் பிறர்க்களந் திடுதிர்
அந்த வாறளக் கப்படு முமக்குமென் றறிமின். 66 |
| |
|
| |
அரிய
நித்திலக் கோவைநீர் பன்றிமீ தணியில்
தெரிகி லாதத னருமையைச் சீரழித் திடுமால்
உரிய மாண்பரி சுத்தவூண் குக்கல்முன் னுய்த்துச்
சொரிய கிற்பினு மன்னவா மென்பது துணிமின். 67 |
| |
|
| |
கேட்டுந்
தேடியுந் தட்டியுஞ் சிந்தனை கிடைப்பர்
நாட்டு மானிட ராதலின் நம்பனை யடுத்துக்
கேட்டுந் தேடியுந் தட்டியு முயன்றிடிற் கிடையா
வீட்டு வாழ்வுகை யுறுமிது சரதமாம் விரைமின். 68
|