பக்கம் எண் :

69

  உளம்ப டப்பகுத் தோதிய வுன்னத
விளம்ப ரத்தைவெ றுத்தவன் வெண்மணற்
களம்ப டுத்தவிற் கட்டழி மென்றுனா
வளம்ப டுத்தம தியிலி போலுமால். 77
 
  இத்தி றத்தன வேகசர் வேசுரன்
சித்த மென்றுதி ருத்தகத் தெள்ளிதின்
வித்த கக்கனி வாயிதழ் விண்டனர்
சுத்த மெய்ச்சுவி சேஷவுத் துங்கரே. 78
 
  சீரு றுங்கதி சேர்வழி யீதென
நேரி லேயுப தேச நிகழ்த்திமேல்
ஒரும் பற்பலு வமைகொ டுண்மையைத்
தேரு மாறுதெ ரிக்கலுற் றாரரோ. 79
 
 

                வேறு

மன்பதைகாள் கிருஷிகன்வெள் ளாண்மைசெயத் தகும்
     பருவம் வாய்த்ததென்னா
நன்புலத்து வித்திடுங்கால் வழியருகும் பார்நிலத்தும்
     நவைத்தூறெஞ்சாக்
கொன்புலத்துஞ் சிதறுண்ட சிற்சிலவித் ததரருகு
     குளித்தவற்றைப்
புன்பறவை விரைந்தணுகிப் பொறுக்கிநுகர்ந் தனவிதனைப்
     புந்திசெய்மின். 80

 
  பார்நிலத்துப் புதைந்தவித்தங் குரித்தெனினும் வேரூன்றப்
     பசுமண்ணின்றிக்
கூர்வெயிலிற் றீந்துகரிந் தனமுட்டூ றுக்கிடையிற்
     குளித்தவித்து
நேர்வளர்ந்து நெருக்குண்டு பயன்படா தொழியநன்செய்
     நிலத்தவோங்கிச்
சீர்பெறநன் மணிமுற்றி யொன்றுநூ றாயபயன்
     றிகழ்த்திற்றோர்மின். 81
 
  மற்றொருவன் மறுக்களைந்து நல்வித்துப் புலந்தெளித்து
     மறையவாங்கே
உற்றொருவ னள்ளிரவிற் களைவித்திக் கரந்தேக
     வுபயவித்தும்