| |
தெற்றெனவங்
குரித்தோங்த் தெரிந்தெஜமான் மற்றிவற்றைச்
சேதியாதீர்
முற்றவிடுங் கொய்பருவத் தெறிந்தெரிவா யிடுதுமென
மொழிந்தான்றேரில். 82 |
| |
|
| |
வித்துபவன்
யான்புலமு முலகாகும் வித்துபர
ராஜ்ஜியத்தின்
புத்திரராங் களைதேரிற் பொல்லாங்கன் புதல்வரதைப்
புலங்கொண்டுய்த்த
சத்துருவும் பைசாச மறுப்புலக முடிவரிவோர்
தாவில்தூதர்
உத்தமர்மெ னிலைசேர்வர் களைபோல்வா ரெரியுண்ப
ருண்மையோர்மின். 83 |
| |
|
| |
நுண்ணியவோர்
கடுகுவிதை நிலத்தூன்றி முளைத்தோங்கி
நோன்றாளூன்றி
விண்ணிலவு புள்ளுறையுந் தருவாகு மென்றுநம்மான்
விதந்ததாயில்
நண்ணரிய பரலோக ராஜ்ஜியமு மொருவனுள
நண்ணிநிற்பின்
எண்ணரிய மனுக்குலங்க ளீடேறு நெறித்தாகு
மிதயத்தூன்றி. 84 |
| |
|
| |
புளித்தசிறு
திரண்மாவா லறப்பிசைந்த மாமுழுதும்
புளிப்பாமென்று
தெளித்தவுரைப் பொருடெரியி லோடதியாற் பாலுறையுஞ்
சீர்மையென்ன
அளித்ததிரு வருள்பெற்ற வவனாலவ் வருட்சார
மயலார்க்கெய்தி
ஒளித்தலைவான் கதிபெறுபக் குவமடைவ ருண்மைவெளி
யுய்த்ததாமால்.
85 |
| |
|
| |
வைத்தநிதித்
திரள்கண்டோன் மறைத்துரிமை யாவும்விற்று
வழங்கியேனும்
அத்தகுநன் னிலங்கொள்வ னருவிலைநித் திலங்கண்டோ
னவ்வாறாகக்
கைத்தலத்த பொருள்வீசிக் கவர்வனென்ற திருவசனக்
கருத்தையோரில்
உத்தமராஜ் ஜியம்விழைந்தோ னொல்லைவழிப் படுவனுல
கொருங்குவர்த்தே. 86
|