| |
முன்னீர்புக்
குலவுசல சரங்களைத்தன் னகடுமுட்ட
முகந்துவாரிச்
சென்னீர்மை வலைபோலுந் திவ்வியராஜ் ஜியம்வலையிற்
சேர்த்தவற்றுள்
நன்னீர்மை யுளதெரிந்து நவைபோக்கு மாறுலக
நாளாந்தத்தில்
துன்னீரர் தமையெரியிட் டறவோரைத் துரியநிலை
தொகுப்பார்தூதர். 87 |
| |
|
| |
தன்கடனைத்
தனக்கிரங்கித் தரணிபன்மன் னித்தபெருந்
தகையோராத
வன்கணன்றன் கடனாளி தனைப்பிடித்துக் குரல்வளையை
வலிந்துபற்றி
என்கடனை யிறுவென்றா னிறைவனறிந் தவளையிருஞ்
சிறையிலிட்டான்
நன்குபிறர் பிழைசமிக்கில் நம்பனுநும் பிழைசமிப்பர்
நலத்தையாய்மின். 88 |
| |
|
| |
முந்திரித்தோட்
டத்துதயந் தொடங்கியொத்து வேலைசெய்த
முறையினோர்க்கும்
நந்துபதி னொன்றாய மணிமட்டும் வந்துபணி
நாடியோர்க்கும்
வந்ததிபன் முழுக்கூலி வழங்கலுமுன் னவர்திருகி
வாதுசெய்யத்
தந்தனன்சொற் படிகூலி யென்னுடைய தெனதிஷ்டஞ்
சரிபோமென்றான். 89 |
| |
|
| |
முழுக்காத
லுடையீரா யிப்பொருளைக் கருத்திருத்தி
முனைவன்சித்த
ஒழுக்காறு கடைப்பிடித்துக் கிடைத்ததுவே போதுமென
வுவந்துநாளும்
அழுக்காறு புறம்போக்கி வழிபடிற்பிந் தினருமுந்தி
யமலராஜ்யம்
இழுக்காது சென்றடைவர் முந்தினர்பிந் தினராவ
ரிதயத்தோர்மின். 90 |
| |
|
| |
தந்தையிது
செய்யென்னச் செய்யேனென் றுடன்மறுத்தறுஞ்
தனயன்பின்னர்ச்
சிந்தைநொந்து செய்தனன்மற் றொருதனயன் செய்வலென்
செய்யானிந்த |