பக்கம் எண் :

72

  மைந்தரில்யார் நல்லனெனில் தந்தைசொன்ன வாறுசெய்த
     மகனேயென்பீர்
நந்தருமெய்ப் பொருடெரிப்ப லொத்திருந்துஞ் செய்யாது
     நடிப்பீர்கேண்மோ. 91
 
  சொல்லாலுஞ் செயலாலுந் துட்டராய்த் திரிந்திராஜத்
     துரோகியாய
அல்லாரே விளம்பரங்கேட் டுளந்திரும்பி யூர்த்தநெறி
     யடுப்பாரானார்
நல்லார்போ லகத்திருந்தும் நன்றிகெட்டுப் பிரபஞ்ச
     நடலைநச்சும்
பொல்லீரே யெல்லீரு மென்றினிநீர் விசுவசிப்பீர்
     புந்திசெய்மின். 92
 
  மிக்கசம்பத் தொருதலைவன் செழித்தோங்கு முந்திரிகை
     வியன்புலத்தைத்
தக்கபொறுப் புப்பேசி யொருசிலர்பால் விடுத்தேகச்
     சதிசெயன்னார்
பக்குவகா வத்துரிமை பெறவந்தோர் தமைக்கொன்றும்
     பழிக்கஞசாமல்
உக்கிரமாய்த் தலைவனொரு புதல்வனையுங் கொலைசெய்தா
     ருதிரஞ்சிந்தி. 93
 
  இப்பெரிய பாதகருக் கெப்பெரிய தண்டனைதா
     னிடத்தகாதென்
றொப்புரைக்கின் றீருணர்மின் பரலோக ராஜ்யமினி
     யும்பானின்றும்
அப்புறமாய்த் தனக்குரிய நற்கனியைத் தருவோர்பா
     லடையுமென்றார்
செப்பரிய திரியேக சர்வேசன் றரவந்த
     தேவமைந்தன். 94
 
  திருந்தியசெங் கோலரசன் றன்மகற்குக் கலியாணஞ்
     செய்தகாலை
பொருந்தினர்க்கு விருந்தமைத்து நுகருவிப்பா னழைத்துவரப்
     போக்கினோரை
வருந்தவடித் துயிர்க்கொலையும் வகுத்தனர்மன் னவன்றேர்ந்தம்
     மறவர்தம்மைப்
பருந்தினுக்கு விருந்தூட்டி யெரிகொளுவி யூரையும்பாழ்
     படுத்தான்சீறி. 95