பக்கம் எண் :

73

  அரையனுழை யரையேவி யாண்டாண்டு திரிவோரை
     யழைத்துவந்து
வரைவின்றி யாவருக்கும் மங்களவத் திரநல்கி
     மகிழ்ந்தூட்டுங்கால்
நிரையூடங் கொருவனுக்குத் தானளித்த துகிலில்லா
     நெறியையாய்ந்து
விரைவிலிருட் சிறையுய்த்தான் பலரழைக்கச் சிலர்தெரிந்த
     விதத்தையோர்மின். 96
   
  அரும்பரம ராஜ்ஜியத்துக் கழைக்கப்பட் டவரெல்லா
     மருகரல்லர்
விரும்பியுளந் திரும்பிநெறி விலகாது முன்சென்று
     விபுதநாட்டுப்
பெருந்தகைக்குப் பிணக்கின்றி வழிபடுவோ ரெவரவரே
     பெருமான்சித்தந்
தெரிந்துகொளப் பட்டவர்மற் றவருலகிற் சிலராவர்
     தெரியுங்காலை. 97
 
  அதிபதியா மணவாளன் கலியாண மணவறையை
     யடுக்குங்காலத்
தெதிர்கொள்வான் காத்திருந்த பத்துக்கன் னியரிலைவ
     ரெண்ணெயில்லா
மதியிலிகள் கண்டுயில மதியுடையார் தீவத்தி
     மரபினேந்தி
விதிமுறையே வரவெதிர்ந்துட் புகுந்தனர்மற் றையர்வெளியே
     விடுபட்டாரால். 98
 
  மற்றிந்தப் பொருள்தெரியில் வானரச னடுத்தீர்வை
     வழங்குங்காலந்
தெற்றெனநீ ரறியகிலீர் மதியிலர்போல் விசுவாசத்
     தீபம்போக்கி
முற்றுலக மயல்கொண்டு துயிலாதீர் விழித்திருமின்
     மோசம்போகீர்
இற்றிதுகாண் பொருளென்ன விளவரசாங் குமரேச
     னியம்பிப்பின்னும். 99
 
  திருவளர்க்கு மொருதனிகன் மறுதேசம் போய்வரற்குச்
     சிந்தையுற்று
மருவியதன் றிரவியத்தைக் காரியஸ்தர் வசமாக
     மரபினீந்திப்