|
பெருநிதியை
யாதாயப் படுத்திவைமி னெனப்பணித்துப்
பெயர்ந்துபோனான்
வருமவதி தனில்வந்தான் காரியஸ்த ரிடங்கணக்கு
வாங்குங்காலை. 100 |
|
|
|
ஐயவிரு
வேம்பொருளை யொன்றிரட்டி யாக்கினமென்
றளித்துநிற்ப
மெய்யரிவ ரெனக்கண்டு மேம்படுத்தி மற்றவனை
விளித்தியாதென்னச்
செய்யில்விதை யாதறுக்கத் தேடும்யஜ மாநனெனத்
தெரிந்துதந்த
நொய்யநிதி புதைத்துவைத்தேன் மற்றிதனைக் கொள்கவென்
று நுவன்றானாக. 101
|
|
|
|
தன்பொருளைப்
புதைத்துநஷ்ட படுத்தியவிச் சழக்கனைக்கா
றளைந்துநீவிர்
துன்பமிகு மிருட்சிறையி லுய்க்கவென்றா னுழையரையச்
சோம்பியீந்த
மன்பொருளை யுள்ளவற்கு வழங்கினான் பொன்வணிகன்
மரபீதாக
என்பொருள்மற் றெனிலுள்ளோர்க் கீவரிலோர்க் குள்ளது
மின் றென்றாரீசன். 102 |
|
|
|
மெய்யறிவு
மெய்ஞ்ஞான மிகுசெல்வஞ் சொல்வன்மை
மேம்பாடாதி
வையகத்தி லவரவர்க்கு வானரச னருளளிக்கும்
வரமாமன்றோ
உய்யுநெறி யுபயோகித் தூழியஞ்செய் திடல்கடமை
யுபேக்ஷிப்பேரரைப்
பொய்யிகந்து வருநடுநா ளிருட்பிழம்பு புகுவிக்கும்
புந்திசெய்மின். 103 |
|
|
|
வேறு
நானிலங்
காணி பூமி நன்குறு பயிராய் முற்றி
மேனியு மதிக மாக விளைந்தன தொகுத்துத் தோன்றுந்
தானியக் குவையைக் கண்டு தகவிலாப் புத்தி யீனன்
கோனருள் குறியா னாகித் தன்னுளே குணிக்க லுற்றான். 104
|