| |
அங்கொரு
குடும்பி தன்னை யடுத்தவன் பன்றி மேய்த்துத்
திங்களோ ரிரண்டு மூன்று செல்லவத் தேச மெங்கும்
வெங்கொடும் பஞ்ச நேர்ந்து வெதுப்பிரும் பசிக்காற் றானாய்
நுங்கினான் பன்றிக் கூட்டு நொறுங்குகுற் றுமித்த விட்டை. |
113 |
| |
|
|
| |
குற்றுமித்
தவிடுங் கிட்டாக் கொடும்பஞ்ச மதிக ரிக்கச்
சற்றுளந் தெளிந்தா னாகிச் சஞ்சலித் தழுதென் றந்தைக்
குற்றவூ ழியா நேக ருண்டுதேக் கெறிய யானோர்
துற்றுண வின்றி யாவி சோர்குவ லிதென்றுற் புத்தி. |
114 |
| |
|
|
| |
புகலொன்று
மில்லே னென்னாப் புந்தியில் பிழையை யுள்ளி
மிகவுள முடைந்து நைந்தான் மெய்ம்மனஸ் தாபங் கொண்டான்
தகவுடைத் தாதை பக்கற் சார்குவ னேற்றான் பெற்ற
மகனெனப் பரிவ ரல்லான் மறுத்திடா ரெனத்தே றுற்றான். |
115 |
| |
|
|
| |
ஒல்லையே
யெழுந்தான் றந்தை யுத்தம குணமுன் னீர்க்க
அல்லல்செய் பசிபின் னுந்த வடுத்தன னறிந்து தந்தை
வல்லைவந் தணைத்து முத்தி மகிழந்தனன் மகவா சைக்கோர்
எல்லையு முளவோ மைந்த னெத்தனை பிழைசெய் தாலும். |
116 |
| |
|
|
| |
எந்தையே
யெந்தை யேயென் றேங்கிநெட் டுயிர்த்துக் கண்ணீர்
சிந்திநொந் துமக்கு முன்னுந் தெய்வத்துக் கெதிரு மாகப்
புந்தியற் றளவில் பாவம் புரிந்தன னினியா னுன்றன்
மைந்தனென் றுரைக்கத் தானு மபாத்திரன் மதியொன் றில்லேன். |
117 |
| |
|
|
| |
ஐயமன்
னிக்கச் சித்த மாயின்மற் றளிய னேன்யான்
உய்யுமா றருளி நும்பா லூழியத் தொருவ னாக்கி
வையகத் திருத்து கென்னா வாய்திறந் தரற்றி நிற்ப
நையலென் றருளிற் கூட்டிச் சென்றன னகத்துள் நண்பால். |
118 |
| |
|
|
| |
மகனிவன்
மரித்தா னின்னே மறுத்துயிர் பெற்றா னாகத்
தகவுடை விருந்தெ மர்க்குச் சமைக்கெனப் பணித்து மைந்தற்
குகவையின் வஸ்தி ராதி யுடுத்தருங் கலமும் பூட்டிப்
புகரறு மகிழ்கொண் டாடி யிருந்தனன் புதல்வ னோடும். |
119 |
| |
|
|
| |
ஆயிடைச்
சேட்டன் வந்தா னகக்களி யாட்டுக் கண்டான்
மேயதென் னெனவினாவி யறிந்தனன் வெகுண்டு நின்றான்
நேயமார் தந்தை நேர்ந்து நின்னொரு கனிட்டன் மாண்டு
போயவன் பிழைத்து வந்த புதுமையின் களியி தென்றான். |
120 |