பக்கம் எண் :

77

  மைந்தநீ யென்னோ டுள்ளாய் வாழவெனக் குள்ள யாவுஞ்
சொந்தமற் றுனக்கே யன்றோ சோதரன் மதியற் றேகி
நொந்துவந் தணைந்தான் மீண்டு நுண்மதி யுடையை நீயுன்
சிந்தனை திருகல் நன்றோ சேர்ந்துடன் களித்தி யென்றான்.
121
 
  வானநாட் டதிபன் றந்தை வான்வழி விடுத்தோர் புத்தி
ஈனராங் குமர ராவ ரிருஞ்சுவி சேஷ மார்க்கர்
ஆனவர் சேட்ட ராவவ ரகக்களிப் படையு நீரார்
மோனராஜ் ஜியத்த ராவர் முறைதெரிந்துணர்ந்து கொண்மின்.
122
 
  ஒருபெருஞ் செல்வன் பீதாம் பரவுடை யுடுத்தி வாழுந்
திருவினன் ராஜ போகஞ் சிறிதெனச் செருக்கும் போகி
அருவிலை பெறுபல் பண்டத் தறுசுவை யமைந்த வுண்டி
பெருவயி றாரத் துய்த்துப் பேணு£ன் மறுமை பேணான்.
123
 
  அங்கவ னணிகொள் மாடத் தலர்கடை துச்சி லாகத்
தங்கிநா ணாளு மாங்கு தணந்தெறி மிச்சில் நச்சிச்
சங்கட நுகரு மேழைத் தரித்திர னங்க முற்றும்
வெங்கொடும் பருக்கண் மிக்கு வேதனை யுழக்கு நீரான்.
124
 
  இன்பெலாந் தூர மாகி விரங்கலுந் தவிப்பு நீங்காத்
துன்பமுஞ் சொரிகண் ணீருந் தொடர்பறாத் துணைநட் பாக
முன்புறு நாய்க ணக்கி முறைப்பணி புரிவோ ராக
என்பக ருதுமவ் வேழை யிலாசரு விடுக்கட் பாட்டை.
125
 
  வறுமையும் பிணியும் யாண்டும் வருத்துபே ரஞரைப் போக்கும்
பொறுமையுஞ் சகிப்புஞ் சிந்தை பூத்தினி தமைய வத்தைத்
தெறுமருந் தாகக் கொண்டு ஜெகத்துநாட் கழித்த பிற்றை
மறுமையி லிராஜ போக மலிந்தசந் நிதிபுக் குய்ந்தான்.
126
 
  பெருமித வாழ்க்கை யுள்ள பேதையச் செல்வன் பொன்றி
எரிமலி கும்பி வாழ்க்கை யெய்தினன் கண்ணே றிட்டுத்
திருமலி ராஜ போகந் தெவிட்டுலா சருவைக் கண்டான்
பொருவிறன் மதியீ னத்தை நினைந்திவை புகல லுற்றான்.
127
 
 

           வேறு

மெய்யா ரணமும் விசுவா சிகடம்
பொய்யா வுரையும் பொருள்செய் திலனாற்
பையா டரவப் பணிவெவ் விடமுண்
டையோ வழலூ டமிழ்வே னளியேன்.

128