பக்கம் எண் :

78

  பாசத் தளையும் படுசெல் வமுநீள்
மோசப் படுபுன் மதியும் முடுகி
நாசப் பரவை நடுவுய்த் தவினி
நீசக் கனனீந் துவதெந் நெறியான்.
129
   
  சாகாப் புழுவுந் தணவாத் தழலுங்
கூகூ வெனநொந் தலறுங் குரலும்
ஏகா வெனைவிட் டினியோ ரிறையும்
போகா வுயிர்பொன் றுவதென் றினியே.
130
   
  ஞாலத் தொருசில் பகல்நன் றில்வினை
ஆலத் தைநுகர்ந் தெனதா ருயிரைக்
காலச் சுழல்சக் கரமீர்ந் திடுபா
தாலக் கடல்வீழ்ந் துதவிப் புறுவேன்.
131
   
  பெருமைத் திடரே றியபித் தனென
கருமத் தை¬ï¤னைந் துககோ ளபதித்
தருமத் துரைநீ திதமத் திரளை
நிருமித் ததெனக் கெனிகழ்த் துவதே.
132
   
  அகல்வா னரச னருள்கோ மகனைப்
புகல்புக் குயவோர் பொழுதுண் டுகொலோ
பகலே யெனிதிக் குவைபா ருளகொண்
டுகவா யருணா ழிகையொன் றுயவே.
133
   
  அருளே துமிலே னகலே னுமைவிட்
டிருளே நரகே யெனையெத் தனையாய்
மருளூ ழிசெறுத் துவருத் திடினும்
பொருள்யா துயிர்போக் கிடவல் லுதிரோ.
134
   
  நல்லார் மதியு நவைதீர் மறையின்
எல்லா மதியு மிதயக் கரிதீங்
கில்லா மதியு மிகந்திங் கிறுத்தாய்
பொல்லா மதியே புகலென் மதியே.
135
   
  ஆண்டுண் டுசுகித் தனையன் புளைபோல்
மாண்டன் றொடொழிந் தனையாங் கொன்மதி
கீண்டித் தலைகீ ழுறமே லெழுவான்
ஈண்டொன் றுரைப்பா யலையெங் குளைநீ.
136