பக்கம் எண் :

79

  சொன்னாய் பலதுன் மதிதொல் புவியிற்
பின்னா வருபே ரிடரா ழிநிலை
உன்னா துனுரைத் தலையோ டிவிழுந்
திந்நா ளெரியுண் பலிதென் கதியே.
137
 
  கள்ளத் தைவிடுத் துளகட் டுரைகொண்
டுள்ளக் கரியே சிலகா லமுளைத்
தெள்ளப் படுபா வியெனைக் கைவிடுத்
தள்ளற் படுபா தலத்தாழ்த் தினையே.
138
 
  உலகா சைபுகட் டியுலா சநெறி
விலகா துமருட் டிமின்னார் வலையிற்
பலகா லும்விழுத் தினையா ரிடநீ
அலகா யுனவஞ் சமறிந் திலனே.
139
 
  அளவில் சுகபோ கமளித் தெனுடன்
இளவா யுளெலா நுகர்ந்தின் றிவ்வுலைக்
களவாழ் வுமளித் தனைகை தவமார்
உளமே யெனைவிட் டொழிவா யலையே.
140
 
  பொன்னா டுபுகப் பொழுதின் றுலகின்
றின்னே விடியா விருண்மூ டியதால்
என்னோ மனனே யெனையுங் கெடுத்தாய்
அன்னோ வினியென் செயலா வதுவே.
141
 
  வாணா ளிறுமுன் வளநா டடையுங் கோணா நெறிகூ டலையே கொடியாய் நாணா ளும்விதைத் தனைநச் சுவினை காணாய் விழைவுற் றதுகா ரிருளே. 142
 
  ஞாலத் தொருநன் றினடைப் பிணமாய்க் காலத் தையிகந் துகடைப் படுமிம் மூலத் தளறூ டுமுயங் கியவென் சீலத் திறன்செவ் விதுசெவ் விதரோ. 143
 
  வேறு என்றிவ் வாறுநொந் திடர்நிரம் பிருட்கடன் முயங்கிப் பொன்று பேறுமற் றேனென வேக்குறீஇப் புனித மன்றி லங்குலா சருவையு மகப்பலி யமைந்த வென்றி யாபிர காமையும் விழிக்கெதிர் கண்டான். 144