பக்கம் எண் :

81

  தக்க தாயினு மரித்தவர் மீண்டுபோய்த் தரணி
புக்கு ரைத்திடு புதுமைகண் டோம்புவர் புவியின்
மக்கண் மற்றையர் சொற்கொளா தெள்ளுதன் மரபென்
றொக்க லுக்குளம் பரிந்துமன் றாடினா னுரறி.
153
   
  துன்று காரிருட் சூழலான் சொற்றவை
கேட்டு வென்றி கூரா சன்றிரு விளம்பரம் விளம்பும்
நன்று ளாருரைக் குணர்வுறார் நம்புவார் கொல்லோ
பொன்றி யோருரைக் கேகென வருந்தவன் போனான்.
154
   
  தீக்கொ டுஞ்சிறை புகுந்தவர் தீவினைப் பயன்மேல்
ஊக்கி நின்றுதுன் பூட்டுபோ துணர்ந்துளந் திரும்பிக்
கூக்கு ரற்படுப் பினும்பய னென்னைகோல் கொண்ட
ஆக்கை வீழுமுன் னறப்பயன் கூட்டிடா தவமே.
155
   
  கூற்று வைகலுங் கோடியா ஜீவரைக் கொள்ளை
ஆற்றி நுங்குவ தறிந்துமெய் யாக்கத்தைக் கருதார்
தோற்று தீவிட வைம்புல நுகர்ச்சியைத் துய்த்து
மாற்ற ருஞ்சிறை மறிவரீ தென்கொலோ மடமை.
156
   
  அருளின் செல்வமே செல்வத்துட் செல்வமற் றதனைத்
தெருளுஞ் செல்வரே யுன்னத நித்திய செல்வர்
பொருளின் செல்வநீர்த் திரையவா மற்றவை போற்றி
மருளும் பூரியர்க் குறுவது நித்திய வறுமை.
157
   
  உலக செல்வத்து மயங்கிமெய் யூர்த்தநூ னெறியை
விலகு றாதருட் செல்வநா டுறுந்துணை விரகோ
டலகில் பேரரு ளாண்டகை யவனிக்கன் றளித்த
இலகு வான்மதி யிருஞ்சுட ரகந்திகழ்த் திடுவாம்.
158
   
                        வேறு
   
  இவ்வண்ண மிரக்ஷணிய நெறிபுதுக்கி வானுறவோங்
     கிதயக் குன்றில்
மெய்வண்ண வற்புதமாந் திருவிளக்கில் விசுவாசச்
     சுடரை யேற்றி
உண்வண்ணஞ் சமைத்திடுவா னுளங்கொண்டு குமரேச
     னுலகோ ருக்குக்
கைவண்ண மருள்வண்ணங் காட்டும்வண்ணஞ்
                               சொல்வண்ணங்
     காட்டுங் கொல்லோ.
159