| |
திருநோக்காற்
றிருவாக்காற் றிருக்கரத்தாற் றிருவருளாற்
றீண்டிக் கிட்டி
ஒருவரிய பிணிபிறவிக் குருடுசெவி டூமைமுட
முதிரப்
பாடு
வெருவருபேய்க் கோரணிசித் தப்பிரமை திமிர்வாத
வியாதி
யாதி
பருவரலுற் றோர்க்கருளி யிகபரநன் மையையளித்தார்
பரமன்
மைந்தன்.
|
160 |
| |
|
|
| |
தொண்டரிடு
முறைபாட்டி னறிதுயினின் றெழுந்தளோர்
சுருதிச்
சொல்லின்
மண்டலஞ்சூழ் வாரிதியின் கொந்தளிப்புங் கடுஞ்சூறை
மாரு
தத்தின்
உண்டுபடு நிலைப்பிறழ்வு மொருங்கமைய வொல்லையுல
குவந்த
தம்மா
அண்டபகி ரண்டமெலா மமைத்ததிரு வாக்கினுக்கீ
தரிதாங்
கொல்லோ. |
161 |
| |
|
|
| |
மன்றலிலா
வொருசிறுமி யமங்கலையி னொருசிறுவன்
வாணான்
முற்றிப்
பொன்றியபின் னுடலீமம் புகுமுன்னர்த் தாய்தந்தை
புரப்பான்
வேண்டச்
சென்றிரங்கிப் போனவுயிர் திரும்பியுய வருள்புரிந்த
செயலை
நோக்கி
நின்றவருங் கேட்டவரும் வானாட்டு நெறிபிடித்து
நிகழ்வ
தானார். |
162 |
| |
|
|
| |
மாண்டுபிரே
தக்குழியி லொருநாலு வைகலுடன்
மறிந்து
மாவி
ஈண்டொருவி மறுமையிற்புக் கினிதுறைந்து மிறைமகிமை
யிகங்கண்
டேத்தக்
காண்டகைய சுவிசேஷ கதிமார்க்க நலங்கவினக்
கருணை
வாக்கின்
மீண்டுயிர்பெற் றெழுந்துதிரு வடிதொழுதா
னொருதொன்டன்
வெளிப்பட்
டைய. |
163 |
| |
|
|
| |
ஒக்கலெலா
மற்றிவரே யுன்னதநாட் டிளவரச
னொருங்கு
பேயின்
சிக்கறுத்துச் சிறைமீட்டு ஜீவகோ டியைப்புரப்பான்
ஜெகத்து
வந்த |
|