பக்கம் எண் :

83

  சக்கரவீ சுரன்மைந்த னெனவிசுவா சம்பூண்டு
      சரணம் போற்றி
அக்கணமே வானரசற் காட்பட்டா ரொருசிறிது
      மைய மின்றி.
164
   
  தூயசேத் திரத்திலெங்கு மித்தகைய வற்புதத்தின்
      றொனிபோய் முட்டப்
பேயரசாட் சியையொருவிப் பிரபஞ்ச மயக்கறுத்துப்
      பின்முன் னாக
நாயகனைத் தரிசித்து நற்கதிமார்க் கத்தூன்றி
      நடைப்பட் டார்பல்
ஆயிரவ ரருணனொளிக் கெதிரூன்றி நிற்பதுகொல்
      லந்த காரம்.
165
   
  எள்ளரிய விளம்பரமு மிகபரசா தனநடையு
      மெதிரி லீண்டும்
விள்ளருமற் புதச்செயலுங் கண்டுகேட் டுளந்திரும்பும்
       விந்தை யோர்ந்து
வள்ளலருட் செயற்கிடைந்தவ் வலகைபா சறையூன்றும்
      வைரி யாய
கள்ளவே டக்குரவ வொன்னாரே சதிபுரியுங்
      கருத்துட் கொண்டார்.
166
   
  பகைப்புலத்தார் சதிவினையும் பரமசுத னரும்பாடும்
      பகையைச் சிந்தி
ஜெகப்புலையன் சிரஞ்சிதைத்த ஜெயப்பாடும் பரலோகத்
       திருவோ லக்கத்
தகைப்புலவ ரெடுத்தேத்துந் தந்தைகளி கூருதலும்
      பிறவு மெல்லா
வகைப்பாடு மாண்டாண்டு கேட்டறிதி வழிக்கிடையில்
      மைந்த வென்றான்.
167
   
                 வேறு
   
  வித்தகக் கதிவழி புதுக்கி மேலைநாள்
நித்திய திரித்துவ நிரும லாதிபன்
புத்திரன் றருமிது புரவு நூனெறி
சித்தசஞ் சலமினித் தீர்தி யாலெனா.
168