பக்கம் எண் :

84

  மக்களை மனைவியை மனையைக் காதல்கூர்
ஒக்கலை யுரிமையை யுவக்குந் தேசத்தை
இக்கணம் விடுத்தியா னியம்பு தேயத்திற்
புக்குவாழ்ந் திருத்திநீ போதி யாலெனா.

169
   
  எழுதிய தோற்சுரு ளெடுத்து நண்பநீ
பழுதிலா மொழியிது பார்த்தி யோவென
உழுவலன் பொடுமன முவந்து நோக்கியீண்
டெழுவல்யான் செல்வழி யாதிங் கென்றனன்.
170
   
  ஆங்குறு பெருவழிக் கப்பு றத்தொரு
பாங்குறு வாயிலைப் பார்த்தி யல்லையேல்
ஓங்கிருஞ் சுடரொளி யொன்று காண்டிமற்
றீங்கிது குறிக்கொளீஇ யேகற் பாலையால்.
171
   
  எட்டிநீ நடந்துசென் றிடுக்க வாயிலைக்
கிட்டியுன் கரங்கொடு கிளர்க பாடத்தைத்
தட்டுதி யுனக்கறி தக்க யாவையும்
உட்டெளி வுறவவ ணுரைக்க லாகுமால்.
172
   
  என்னுரை யணுத்துணை யிகப்பை யாயினும்
மன்னர்கோன் வளநகர் மருவு வாயலை
பன்னுறு கவர்வழி பலவுண் டாங்கவை
உன்னரு நரகபா தலத்தி லுய்க்குமால்.
173
 
  நெறிபிச காதிடை நின்றி டாதொளிக்
குறிபிடித் தேகெனக் கோதி லன்பொடு
செறியுநல் லாசிகள் செப்பி னானுவந்
தறிவனு மஞ்சலித் தகன்று போயினான்.
174
   
      சுவிசேஷமார்க்கப் படலம் முற்றிற்று.