|
என்றுவன்
னெஞ்சனீ தியம்பக் கேட்டலும்
நன்றுநன் றுன்னுரை நாச தேசத்தில்
நின்றுயி ரழிந்தெரி நிரையஞ் சேரவோ
இன்றெனைக் கூவுதி திரும்பென் றேழைநீ.
|
9 |
|
|
|
|
சீலமு
மொழுக்கமுந் திறம்பு தேசத்தின்
சாலமு மாயமுந் தழுவி யின்னுமென்
காலமும் ஜீவனுங் கவிழ்ப்ப னேகொலாம்
ஆலமென் றறிந்தபி னருந்து வாரெவர்.
|
10 |
|
|
|
|
நிலைநிலா
தழிவது நிரையத் துய்ப்பது
கலைவலார் வெறுப்பது களங்க மிக்கது
மலைவுறு துன்பநோய் மலியப் பெற்றது
புலைபுல தத்தநு போக சாரமே.
|
11 |
|
|
|
|
குறைவுறா
நித்தியங் குலவத் தக்கது
கறையுறா நலத்தது கருதொ ணாதது
நிறைவது வாடிடு நீர்மைத் தன்றுகாண்
இறைபர லோகபே ரின்ப பாக்கியம்.
|
12
|
|
|
|
|
ஆழியான்
பேருல கணுகு மின்பத்துக்
கூழியிவ் வுலகிருந் துறுக ணின்றியே
வாழினு மிஃதணு மட்டொப் பாகுமோ
பாழிலே யுழலுதி பயனை யோர்கிலாய்.
|
13 |
|
|
|
|
மகத்துவ
மாயபே ரின்ப வாழ்வினை
அகத்திடை மதிப்பவ ரலகி லாதுவந்
திகத்துறு பாடெலா நொய்தென் றெள்ளுவர்
ஜெகத்தையே மதிப்பவர் சிந்தை மாழ்குவர்.
|
14 |
|
|
|
|
புற்புத
வுடற்சுக போக நச்சியே
பிற்படு குழியில்வீழ்ந் தழிவர் பேதையர்
முற்படு துயரினை முருக்கி நித்திய
சிற்பர சுகநிலை யடைவர் செவ்வியோர்.
|
15 |
|
|
|
|
களைகணா
வுலகெலாங் காக்கு மெம்பிரான்
கிளையலால் நலந்தரு கிளையெற் கில்லையால்
வளையுமிக் குழுவெனை மயற்குள் ளாக்கிடுந்
தளையலாற் கிளையெனச் சாற்ற லொல்லுமோ.
|
16
|