பக்கம் எண் :

87

  மேழிகைங்ப பிடித்தனன் விடுக்கி லேனினி
நாழியொன் றாயினு நாச தேசத்துத்
தாழிலே னுன்கெடு மதியைச் சார்ந்துநின்
றூழியா யகனுரை கடக்க வொண்ணுமோ.

16
   
  மற்றினி யுரைப்பதென் வன்னெஞ் சோயிவண்
சொற்றவை மெய்யெனத் துணிதி யேலெற்பின்
பற்றிவான் பரகதிப் பயன்றுய் யின்றெனில்
நிற்றியே னில்லென நிகழ்த்தி னானரோ.
17
   
  கேட்டுவன் னெஞ்சுனீ தமையுங் கேவல
நாட்டுவாழ் வுவந்தனை நடத்தி நீயெனா
மீட்டுயாம் போதுமென் னெஞ்ச வேதியன்
கூட்டுற வினியொலா தென்று கூறினான்.
18
   
  ஒதுமெய்ச் சுருதிநூ லுரைக்கு நீதியும்
தீதுநா மியற்றிய திறனு மேல்வரும்
மாதுயர்க் ககன்றுயும் மார்க்க மாவதுங்
காதலாய்த் தெரித்திடு மிவனைக் காய்தியோ.
20
   
  வேதிய னிங்ஙனம் விதந்த வாய்மையுங்
கோதறு செய்கையுங் குணமு மொத்தலால்
தீதல விவன்வழிச் சேற லென்றியான்
போதர விசைந்துளம் பொருந்தி னேனெனறான்.
21
   
  உற்றமென் னெஞ்சகை யுறவ ருந்திட
வெற்றுமிக் குத்துதல் விழுமி தன்றுகாண்
சுற்றமுங் காதலுந் துனியின் மூழ்கநீ
பெற்றிடு பயனொரு பெற்றித் தாகுமோ.
22
   
  என்னதுன் மதியுனக் கியைந்த தீங்கிவன்
உன்னரும் பைத்திய முனக்கு நேர்ந்ததோ
சொன்னவத் திருநகர் துன்னி னாரெவர்
பன்னுசொப் பனப்பொருள் பலிக்கு மேகொலாம்.
23
   
  ஓடிட மருந்தயின் றுறங்கி வீழ்தல்போல்
நாடியிங் கிவற்றர நவின்று வந்தினே
கோடிய மனத்தின னோடு கூடிநீ
கேடுறத் துணிந்தனை கிளக்க லாவதென்.
24