பக்கம் எண் :

சீறாப்புராணம்

1125


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அன்றியும், அளவற்ற அழகானது சிறக்கப் பெற்ற தாங்கா நிற்கும் ஆபரணங்களை யுடைய கதீஜா றலியல்லாகு அன்ஹா அவர்கள் பெற்ற நல்ல சாயலை யுடைய சொர்க்க லோகத்தினது அரம்பையர்க ளாகிய கூறுல்ஹீன்களுக்குத் திலதத்தை நிகர்த்தவர்க ளான அந்தப் பாத்திமா றலி யல்லாகு அன்ஹா அவர்களுக்கு அந்தகாரமானது நெருங்கப் பெற்ற கரு நிறத்தையுடைய வாளைப் போன்ற விழிகளின் நடு வாக இரேகைகளோடிப் பசிய தளிரானது பசப் புற்றதைப் போன்று பருவமானது வந்து தங்கிற்று.

 

3050. வடிவுறுஞ் செம்பொற் பூவில் வாசம்வந் துறைந்த போலுங்

     கொடிமல ரதனிற் சேர்ந்த கொழுநறா நிறைந்த போலுங்

     கடிநெடுங் கழையிற் செவ்விக் கதிர்மணி தரித்தல் போலு

     மடிகடம் புதல்விக் கின்பப் பருவம்வந் தடைந்த தன்றே.

10

      (இ-ள்) அன்றியும், அழகு பொருந்திய செந்நிறத்தைக் கொண்ட சொர்ண வடிவமான புஷ்பத்தி னிடத்து வாசனையானது வந்து தங்கினதை நிகர்த்தும் கொடியின் கண்ணுள்ள பூவில் பொருந்திய செழிய தேனானது நிறைந்ததை நிகர்த்தும், இனிமையைத் தாங்கிய நெடிய கரும்பி னிடத்து அழகிய பிரகாசத்தை யுற்ற இரத்தின மானது உறைந்ததை நிகர்த்தும், நமது குருவாகிய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களின் புத்திரியான அந்தப் பாத்திமா றலி யல்லாகு அன்ஹா அவர்களுக்கு இன்பத்தைக் கொண்ட பருவ காலமானது வந்து சேர்ந்தது.

 

3051. வரிசையும் பேறும் வேத வாய்மையு முளர தன்றி

     யரசருக் கரசர் செல்வத் தரும்பொரு ளனைய செல்வி

     பெரியவ னருளால் வந்த பெண்ணினை வரைத லியானென்

     றுரைகொடுப் பவரியா ரென்ன வுள்ளநெக் குருகு வாரும்.

11

      (இ-ள்) அவ்வாறு வந்து சேர, சங்கையும் பதவியும் புறுக்கானுல் கரீமென்னும் வேதத்தினது சத்தியமு முளர். அஃதல்லாமலும் இராஜர்களுக்கும் இராஜரான நாயகம் நபிகட் பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களின் செல்வத்தினது அருமையான திரவியத்தை நிகர்த்த மகளும் பெரியவனான ஜல்ல ஜலாலகு வத்த ஆலாவின் காருண்ணியத்தினால் இவ்வுலகத்தின் கண் அவதரித்த பெண்ணுமான அந்தப் பாத்திமா றலி யல்லாகு அன்ஹா அவர்களை யான் விவாகஞ் செய்வே னென்று சொல்லுபவர்கள் யாவர்? ஒருவருமில்ல ரென்று மனமானது நெக்குருகு வாரும்.