பக்கம் எண் :

சீறாப்புராணம்

1127


இரண்டாம் பாகம்
 

முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களின் தெய்வீகந் தங்கிய சந்நிதானத்தில் போய்க் கேளுங்களென்று எழுதிய சீட்டுகளைப் பிரதி தினமும் தங்களின் பந்துக்களிடத்தில் அனுப்புவாரும்.

 

3055. எரிமணிக் கனகப் பூணு மிளநிலா வொழுகு முத்தப்

     பெருமணி வடமு மெண்ணில் வெறுக்கையும் பெரிது முன்னர்த்

     தருகுவம் வதுவை யெம்பா லளித்திடி லென்னத் தாழ்ந்து

     கருதல ரரியே றன்னார் காதினி லோது வாரும்.

15

      (இ-ள்) சத்துராதிக ளாகிய யானைகளுக்கு ஆண் சிங்கத்தை நிகர்த்த சில அரசர்கள் அந்தப் பாத்திமா றலி யல்லாகு அன்ஹா அவர்களை எங்களிடத்தில் விவாகஞ் செய்து தந்தால் நாங்கள் பிரகாசியா நிற்கும் இரத்தினங்கள் பதித்த பொன்னினாற் செய்யப்பட்ட ஆபரணங்களும் இள நிலாவைச் சிந்துகின்ற முத்துக்கள் பதித்த பெரிய மணி வடங்களும் கணக்கற்ற திரவியங்களும் மிகவாக முன்னர் தருகின்றோ மென்று பணிந்து காதுகளிற் கூறுவாரும்.

 

3056. உரைபல ரினைய வண்ண முலகவ ரியம்ப யாணர்

     மரைமலர் வதன வள்ளன் மங்கைதன் வதுவை வல்லோன்

     றிருவுளப் படிய தன்றிச் செய்வதின் றென்னச் செவ்வி

     தருமனத் திருத்தி யாருஞ் சாற்றுதல் பொருந்தி லாரால்.

16

      (இ-ள்) உலகவ ரான பல மன்னர்கள் இவ்வித வார்த்தைகளைக் கூற, அழகிய தாமரைப் புட்பத்தை நிகர்த்த முகத்தை யுடைய வள்ளலாகிய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் தங்களின் புதல்வி யான காத்தூனே ஜன்னத் பீவி பாத்திமா றலி யல்லாகு அன்ஹா அவர்களின் விவாகத்தை வல்லவ னான ஜல்ல ஷகுனகு வத்த ஆலாவின் திருவுளப் படியே யல்லாமல் யான் செய்வதில்லை யென்று அழகைத் தரா நிற்கும் தங்களின் மனதின்கண் ணிருக்கும் வண்ணஞ் செய்து ஒருவரும் அதைப் பற்றிப் பேசுவதைப் பொருந்தாம லிருந்தார்கள்.

 

3057. இவ்வித நிகழா நிற்ப வியைதரு விதியின் பண்பான்

     மவ்வலங் குழலார் வாழ்க்கைத் துணைவரு நயத்தை நோக்கித்

     தெவ்வடர்த் தெறியும் வெள்வேற் சிங்கவே றனைய காளைச்

     செவ்விய லலியார் காதல் சிந்தையி னாளும் பூத்தார்.

17

      (இ-ள்) இந்தப் படி நடக்க, பொருந்திய விதியினது தகுதியினால் வாசனை தங்கிய அழகிய கூந்தலை யுடையவர்களான அந்தப் பாத்திமா றலி யல்லாகு அன்ஹா