பக்கம் எண் :

சீறாப்புராணம்

1131


இரண்டாம் பாகம்
 

3066. கனிந்தினி தொழுகும் பெண்மைக் கரும்பைத்தேன் கனியை வாசம்

     புனைந்தபூங் கதுப்பிற் றுஞ்சும் வண்டெனப் பொருகண் ணாரை

     மனந்தனிற் குடிகொண் டுற்ற வாழ்வையென் னிருகண் ணீங்கா

     வனந்தனை யிறைவா வென்பா லளித்தியென் றுரைத்து நின்றார்.

26

      (இ-ள்) யாவற்றிற்கும் இறைவ னான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவே! கனிவு கொண்டு இனிமையுடன் சிந்தா நிற்கும் பெண் தன்மையை யுடைய கரும் பானவர்களை, தேனைக் கொண்ட கனியானவர்களை, பரிமளத்தைத் தாங்கப் பெற்ற பூங்கதுப்பி னிடத்துத் தூங்குகின்ற வண்டைப் போலும் பொருவா நிற்கும் விழியை யுடையவர்களை, இதயத்தின் கண் வாசங் கொண்டு தங்கிய வாழ்வானவர்களை எனது இரு நயனங்களையும் விட்டு ஒழியாத அன்னமான அப்பாத்திமா றலி யல்லாகு அன்ஹா அவர்களை, என்னிடத்தில் தருவாயாக வென்று சொல்லி நின்றார்கள்.

 

3067. வனைகழற் செருவாள் வள்ளன் மனத்துறுங் காமத் தன்பும்

     பனிமலர்ச் செருகுங் கூந்தற் பாவைதம் மெழிலுஞ் சூட்ட

     நனைதரும் வதுவை வேண்டி நாடொறுங் கெஞ்சிக் கெஞ்சித்

     தனியனுக் குரைத்தா ரல்லாற் பிறர்க்குரை சாற்றி லாரே.

27

      (இ-ள்) அன்றியும், அலங்கரிக்கப்பட்ட வீரக் கழலையும் யுத்தத்தினது வாளாயுதத்தையுங் கொண்ட வள்ளலாகிய அந்த அலி றலி யல்லாகு அன்கு அவர்கள் தங்களின் இதயத்தின் கண் பொருந்திய காமத்தினது அன்பையும், குளிர்ந்த புஷ்பங்களை இடை இடை வைக்கப்பட்ட கூந்தலைக் கொண்ட பாவையாகிய அந்தப் பாத்திமா றலி யல்லாகு அன்ஹா அவர்களின் அழகையும் சூட்டும் வண்ணம் பூவரும்புக்களாற் செய்யப் பட்ட மாலையைத் தரா நிற்கும் விவாகத்தை விரும்பிப் பிரதி தினமும் கெஞ்சிக் கெஞ்சித் தனியவ னான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவுக்குச் சொன்னார்களே யல்லாமல் மற்றையோர்க்குக் கூறிலர்.

 

3068. அரிந்துவெங் குபிரை யோது மாதிநூற் கலிமா வித்தி

     விரிந்ததீன் பயிரை யேற்றும் விறற்படை யலியாம் வேங்கை

     பரிந்திரு கரங்க ளேந்திப் பற்பல்கா லிறையோன் றன்பாற்

     கரைந்துநின் றிரந்த தெல்லா முறக்கபூ லாய தன்றே.

28

      (இ-ள்) வெவ்விய குபிர் மார்க்கத்தைக் கொண்ட காபிர்களையறுத்து யாவற்றிற்கு முதன்மைய னான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவினது புறுக்கானுல் கரீ மென்னும் வேதத்தின் ஓதுகின்ற ழுலாயிலாஹ இல்லல்லாகு முகம்ம துர்றசூ லுல்லாஹிழு யென்னுங் கலிமாவை விதைத்துப் பரவிய தீனுல் இஸ்லா