பக்கம் எண் :

சீறாப்புராணம்

1132


இரண்டாம் பாகம்
 

மென்னும் பயிரை யேற்றிய வெற்றியினது ஆயுதங்களை யுடைய அலி றலி யல்லாகு அன்கு ஆகிய சிங்க மானவர் யாவற்றிற்கு மிறைவ னான ஹக்கு சுபுகானகு வத்த ஆலாவினிடத்தில் பற்பல தடவை அன்புற்று இரண்டு கைகளையு முயர்த்தி யுருகி நின்று யாசித்த அனைத்தும் பொருந்தும் வண்ணம் கபூ லாயிற்று.

 

3069. மூதிருட் படலஞ் சீக்கு முச்சுடர்க் கதிரு மொவ்வா

     பாதலம் விசும்ப தூர்க்கும் படர்சிறைக் கருணைச் செங்க

     ணாதரம் பெருக வாதி யருளின்வா னிழிந்து மெய்மைத்

     தூதரி னிடத்தில வந்தார் துணையெனுஞ் சபுற யீலே.

29

      (இ-ள்) அவ்வாறு கபூ லாகப் பழமையைக் கொண்ட அந்தகாரப் படலத்தைச் சீக்குகின்ற அக்கினி, ஆதித்தன், சந்திரனென்னும் முச் சுடரினது பிரகாசமும் பொருந்தாத பாதாளத்தையும் ஆகாயத்தையும் தூர்க்குகின்ற விரிந்த சிறகுகளையும் காருண்ணியத்தைக் கொண்ட சிவந்த கண்களையுமுடைய தங்களின் துணைவ ரென்று கூறா நிற்கும் ஜிபுரீ லலைகிஸ்ஸலா மவர்கள் யாவற்றிற்கு முதன்மைய னான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவின் கிருபையினால் அன்பான ததிகரிக்கும் வண்ணம் வான லோகத்தை விட்டு மிறங்கிச் சத்தியத்தை யுடைய றசூ லாகிய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களிடத்தில் வந்தார்கள்.

 

3070. வந்தடுத் துறைந்து வண்மை முகம்மதே சலாமென் றோதிப்

     பைந்தொடி கரிய கூந்தற் பாத்திமா பொருட்டால் வானி

     லந்தமி லவன்றன் பாலி னிகழ்ந்தவை யனைத்துந் தேறும்

     புந்தியின் மகிழ்வு பூப்பப் படிப்படி புகல லுற்றார்.

30

      (இ-ள்) அவ்வாறு வந்து சமீபித் திருந்து அழகிய முகம்ம தென்னும் அபிதானத்தை யுடையவர்களே! ழுஅஸ்ஸலா முன் அலைக்குழு மென்று சொல்லிப் பசிய வளையல்களையும் கரு நிறத்தினது கூந்தலையுங் கொண்ட பாத்திமா றலி யல்லாகு அன்ஹா அவர்களின் ஏதுவினால் வான லோகத்தில் முடிவற்றவனான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவின் சமூகத்தில் நடந்தவைக ளியாவையும் தெளிந்த அவர்களினது சிந்தையின்கண் சந்தோஷ மானது உண்டாகும் வண்ணம் படிப் படியாகச் சொல்லத் தொடங்கினார்கள்.

 

3071. அரியவன் றிருமெய்த் தூதே யண்ணலே யிறையோன் சோதிக்

      குருமணி யினத்தாற் போதாற் கொழுந்துகி லதனாற் செம்பொற்

      றிருநகர் மனைக டோறுஞ் சிறப்பிக்க வருளிச் செய்தா

      னுரையருட் படியே வானோ ரும்பரின் விளக்கஞ் செய்தார்.

31