|
இரண்டாம் பாகம்
3074.
அடலபூ பக்கர் வெற்றி யரியும
றதுமா னொன்னா
ரிடரற வருமுகாசி ரீன்களன்
சாரி மார்க
ளுடனுறை முதியோர்க் கும்ப
ருற்றசோ பனத்தைச் செந்தேன்
வடிமலர்த் தொங்கற் றிண்டோண்
முகம்மது வழங்கி னாரால்.
34
(இ-ள்) செந் நிறத்தைக்
கொண்ட மதுவைப் பொழியா நிற்கும் புஷ்பங்களினாலான மாலையை யணிந்த திண்ணிய தோள்களை யுடைய
நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் வலிமையைக்
கொண்ட அபூபக்கர் சித்தீகு றலி யல்லாகு அன்கு அவர்களுக்கும் விஜயத்தைப் பெற்ற சிங்க மாகிய
உமறு காத்தாபு றலி யல்லாகு அன்கு அவர்களுக்கும் உதுமா னிபுனு அப்பான் றலி யல்லாகு அன்கு அவர்களுக்கும்
சத்துராதிக ளாகிய காபிர்களினது துன்ப மானது அற்றுப் போகும் வண்ணம் வந்த முகாஜிரீன்களுக்கும்
அன்சாரீன்களுக்கும் தங்களோடு தங்கிய முதியவர்களுக்கும் சொர்க்க லோகத்தி னிடத்துப்
பொருந்திய முகூர்த்தத்தை எடுத்துச் சொன்னார்கள்.
3075.
கனகநா டதனி னுற்ற காரண
வமுதந் தேக்கி
யனைவருங் களிப்பு வெள்ளத்
தாநந்தக் கடலின் மூழ்கி
யினையன நினைத்தோ
மியாங்க ணினைத்தவை யிறையோன் செய்தான்
வனைகழ லலிதம் பேறின் மகிமையார்
வகுக்க வல்லார்.
35
(இ-ள்) அவ்விதம்
சொல்ல, அங்கிருந்த அவர்கள் யாவரும் சொர்க்க லோகத்தின் கண் பொருந்திய காரண மாகிய
அமுதத்தைக் காதின் வழியாய் நிறையச் செய்து சந்தோஷ மாகிய ஜலத்தைக் கொண்ட ஆநந்த சாகரத்தில்
முங்கி யாங்களும் இத்தன்மைத்தான சங்கதியைச் சிந்தித்தோம். அவ்வாறு சிந்தித்தவற்றையே
யாவற்றிற்கும் இறைவ னான அல்லாகு சுபுகானகு வத்த ஆலா வானவ னியற்றினான். அலங்கரிக்கப்பட்ட
வீரக் கழலை யுடைய அலிறலி யல்லாகு அன்கு அவர்களினது பேற்றின் பெருமையை வகுத்துச் சொல்ல வல்லவர்கள்
யாவர்? ஒருவருமில்லர்.
3076.
என்னுநன் மொழிகண்
மிக்கோ ரினியன மகிழ்விற் கூறப்
பன்னகம் பேசப் பேசும்
பார்த்திவ ரிறசூ லுல்லா
தன்னகத் திருந்த வண்ண முடித்தனன்
றினியோ னென்ன
மன்னபித் தாலி பீன்ற மணியினைக்
கொணர்மி னென்றார்.
36
(இ-ள்) என்று சொல்லும்
இனிமையை யுடையன வாகிய நன்மை பொருந்திய வார்த்தைகளை மேலோர்களான அவர்களி
|