பக்கம் எண் :

சீறாப்புராணம்

1135


இரண்டாம் பாகம்
 

யாவரும் சந்தோஷத்தோடுஞ் சொல்ல, பாம்பானது பேச எதிர் பேசிய இராஜராகிய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் தங்களின் மனதினிடத் திருந்த படியே தனியவ னான ஜல்ல ஜலாலகு வத்த ஆலாவானவன் நிறைவேற்றினா னென்று அரசராகிய அபீத் தாலி பென்பவர் பெற்ற இரத்தினமான அலி றலி யல்லாகு அன்கு அவர்களை இங்கு கூட்டிக் கொண்டு வாருங்களென்று கட்டளை யிட்டார்கள்.

 

3077. மருவலர் மதங்க டேய்க்கு மன்னவ ருரைத்த மாற்ற

     மிருவர்கள் சென்னி மேற்கொண் டெழுந்தலி தம்மை முன்னிப்

     பரிவினின் சலாமுங் கூறிப் பாவலர் வறியோர் வாழச்

     சொரிதருஞ் செங்கை வேந்தே சோபனம் வருக வென்றார்.

37

      (இ-ள்) சத்துராதிக ளாகிய காபிர்களின் மதங்களை அழிக்கா நிற்கும் அரசரான நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் அவ்வாறு கூறிய வார்த்தையை தங்களின் சிரமேற் கொண்டு இருவர்கள் எழுந்து சென்று அலி றலியல்லாகு அன்கு அவர்களை நெருங்கி அன்போடு ழுஅஸ்ஸலாமு அலைக்குழு மென்ற சலாமுஞ் சொல்லிக் கலை வல்லாரும் தாரித்திரர்களும் வாழும் வண்ணம் தானத்தைப் பொழியா நிற்கும் சிவந்த கையை யுடைய அரச ரானவரே ழுசோபனம்ழு வாருங்க ளென்று சொன்னார்கள்.

 

3078. மதுகைமன் னவர்கள் கூறுஞ் சோபன வசனந் தன்னா

     னிதயத்தி னிருந்த வண்ண முடிந்ததோ வென்ன வெண்ணிக்

     கொதிநுனைப் பகுவாள் வள்ள லெழுந்திரு குவவுத் திண்டோட்

     புதுநறாத் துளிக்குந் தொங்கல் புரடர விரைவின் வந்தார்.

38

      (இ-ள்) வெற்றியை யுடைய அரசர்களாகிய அவ் விருவர்களும் அவ்வாறு கூறிய சோபன வார்தையினால் வெப்பத்தைக் கொண்ட நுனியை யுடைய பிளந்த வாளாயுதத்தைத் தாங்கிய வள்ளலான அலியிபுனு அபீத்தாலிபு றலி யல்லாகு அன்கு அவர்கள் தங்களின் மனதினிடத்து இருந்த பிரகாரம் நிறைவேறிற்றோ? என்று நினைத்து எழும்பித் திரட்சியையும் வலிமையையுங் கொண்ட இரு புயங்களிலும் புதிய மதுவைப் பொழியும் பூமாலை யானது கிடந்து புரளும் வண்ணம் வேகத்தில் வந்தார்கள்.

 

3079. ஆரண முழங்கும் பள்ளி வாயற னவையி னண்ணிக்

     காரணக் குரிசிற் கின்பக் கட்டுரை சலாமுங் கூறி

     யூரவ ருடனு மோர்பா லுறைந்தன ருயர்ந்த வெற்றி

     யேரணிந் திலங்கும் பைம்பூ ணிளஞ்சிங்க மிருந்த தொத்தே.

39