பக்கம் எண் :

சீறாப்புராணம்

1136


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அவ்வாறு வந்து வேத வசனத்தி னோசையானது முழங்கா நிற்கும் பள்ளி வாயலினது சபையி னிடத்து நெருங்கிக் காரணத்தைக் கொண்ட எப் பொருட்கு மிறைவ ராகிய நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களுக்கு இனிமையை யுடைய கட்டுரை யாகிய ழுஅஸ்ஸலாமு அலைக்குழு மென்ற சலாமுஞ் சொல்லி அந்தத் திரு மதீனமா நகரத்தார்களோடும் ஓரிடத்தில் ஓங்கிய விஜயத்தினது அழகைத் தரித்துப் பிரகாசியா நிற்கும் பசிய ஆபரணங்களை யுடைய இளம் பிராயத்தினது சிங்கமானது இருந்ததை நிகர்த்து இருந்தார்கள்.

 

3080. தமனியப் பதியிற் றூபாத் தருவயி னடந்த பேறு

     மமரருக் கரசர் கூற நபியக மகிழ்ந்த வாறுந்

     திமிரவெங் குபிரை யோட்டுந் தினகர னென்னுந் தூயோர்

     கமைதரு சீற்ற வேங்கை யலியகங் களிப்பச் சொன்னார்.

40

      (இ-ள்) அவ்வா றிருக்க, சொர்க்க லோகத்தி னிடத்துத் தூபாவென்னும் மரத்தினது அடியில் நிகழ்ந்த வரலாற்றையும், தேவர்களாகிய மலாயிக்கத்து மார்களுக்கு அதிபதியான ஜிபுரீ லலைகிஸ்ஸலா மவர்கள் சொல்ல, தங்களின் சிந்தையானது மகிழ்ச்சி யடையப் பெற்ற வரலாற்றையும், அந்தகார மாகிய வெவ்விய குபிரை யோட்டுகின்ற சூரிய னென்று சொல்லும் பரிசுத்தத்தை யுடையவர்களான நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் பொறுமையைத் தருகின்ற சீற்றத்தைக் கொண்ட புலியாகிய அலி றலி யல்லாகு அன்கு அவர்களின் மனமானது சந்தோஷிக்கும் வண்ணஞ் சொன்னார்கள்.

 

 

3081. வானவர்க் கரசர் சொன்ன வாய்மையின் முதியோர் கூறுந்

     தேனெனு மணத்தின் றீஞ்சொற் செவிவழி புகுத லோடுங்

     கானமர் வேங்கை வள்ளல் கதிர்மணிப் புயமு நெஞ்சுந்

     தானவ னருளீ தென்னத் தடப்பெரும் புளகம் பூத்த.

41

      (இ-ள்) தேவர்களாகிய மலாயிக்கத்து மார்களுக்கு அதிபதியான ஜிபுரீ லலைகிஸ்ஸலா மவர்கள் கூறிய வார்த்தைகளின் வண்ணம் யாவற்றிற்கும் முதியோரான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் சொல்லிய தேனென்று புகலும் விவாகத்தினது இனிய வார்த்தைகளானவை காதுகளின் மார்க்கமாய் நுழைதலோடும் காட்டி னிடத்துத் தங்கிய புலியாகிய வள்ளலான அலி யிபுனு அபீத் தாலிபு றலி யல்லாகு அன்கு அவர்களின் மிகுத்த அழகைக் கொண்ட இரு தோள்களும் நெஞ்சமும் இஃது தானவனான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவின் காருண்ணிய