பக்கம் எண் :

சீறாப்புராணம்

1138


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அவ்வாறு கற்பிக்க, அருமையான புறுக்கானுல் மஜீதென்னும் வேதத்தினது முதியோர்களாகிய சிலர் சென்று யாவற்றிற்கும் இறைவனான அல்லாகு சுபுகானகு வத்த ஆலா வானவன் அலி யிபுனு அபீத் தாலிபு றலி யல்லாகு அன்கு அவர்களுக்கு இனிமையை யுடைய அழகிய விவாகத்தை நிறைவேற்றினா னென்று ஜிபுரீ லலைகிஸ்ஸலா மவர்கள் சொல்லிய விதத்தையும் வாசனை தங்கிய புஷ்பங்களினால் செய்யப்பட்ட வெற்றி மாலையைத் தரித்த திண்ணிய புயங்களை யுடைய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் சந்தோஷ மடைந்த விதத்தையும் முறுக்கைக் கொண்ட கூந்தலை யுடைய மானாகிய பாத்திமா றலி யல்லாகு அன்ஹா அவர்களின் முன்னர் சொன்னார்கள்.

 

3085. மறையவ ருரைத்த மாற்றி மதிநுதன் மடந்தை கேட்டின்

     றிறையவன் முடித்த வாறு மியனபி மகிழ்ந்த வாறு

     முறையெனத் தலைமேற் கொண்டேன் முன்னர் நூன்முழுதும் வல்லீ

     ரறைவதொன் றுளது கேண்மி னெனுமுரை யருளிச் சொல்வார்.

45  

      (இ-ள்) வேதியர்க ளான அவர்கள் அவ்வாறு சொன்ன வார்தைகளை மூன்றாஞ் சந்திரனைப் போலும் நெற்றியை யுடைய மடந்தை யாகிய அந்தப் பாத்திமா றலியல்லாகு அன்ஹா அவர்கள் கேள்வியுற்று யாவற்றிற்கு மிறைவனான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவானவன் இன்றையத் தினம் நிறைவேற்றிய வாறும் இயல்பினை யுடைய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் மகிழ்ச்சி யடைந்தவாறும் முறைமையான தென்று சொல்லி யான் எனது சிரத்தின் மீது கொண்டேன். வேத நூற்க ளியாவற்றையுங் கற்றுத் தெளிந்த வல்லவர்களே! யான் கூறும் சமாச்சாரமான தொன்றுள்ளது. அஃதை நீங்கள் கேளுங்க ளென்னும் வார்த்தையைச் சொல்லிச் சொல்லுவார்கள்.

 

3086. சினவுவே லபித்தா லீபு சேயெனும் புலிக்கி யானே

     மனையினிற் குரிய ளானேன் மகரிர சிதமைந் நூறென்

     றுனுமொழி பொருத்த மில்லே னென்னுளத் துறைந்த வண்ண

     மினிதுற வருள வேண்டு மெனுமுரை விளங்கச் சொன்னார்.

46

      (இ-ள்) கோபத்தைச் செய்கின்ற வேலாயுதத்தை யுடைய அபீத்தாலி பென்பவரின் புத்திர ரென்று கூறும் புலியானவர்களின் வீட்டிற்கு யான் உரிமையளாகினேன். மகர் ஐந்நூறு பொற்கா