பக்கம் எண் :

சீறாப்புராணம்

1139


இரண்டாம் பாகம்
 

சென்று சிந்தித்த வார்த்தைக்குச் சம்மதமில்லேன். எனது இதயத்தினிடத்திருந்த பிரகாரம் இனிமையானது பொருந்தும்படி தரல் வேண்டுமென்று சொல்லும் வார்த்தைகளை விளங்கும் வண்ணம் கூறினார்கள்.

 

3087. மடந்தையர் திலகம் போன்ற பாத்திமா வகுத்த மாற்றம்

    படர்ந்தகேள் வியர்கள் வந்து நபிமுனம் பகரக் கேட்டுக்

    கடந்தசெங் கதிர்வே லேந்துங் காவல ரெவரு முள்ளத்

    திடந்தனி மலைவு தோன்றி யிருந்தனர் பெரிதின் மன்னோ.

47

      (இ-ள்) பெண்களிற் சுடிகையை நிகர்த்த அந்தப் பாத்திமா றலியல்லாகு அன்ஹா அவர்கள் அவ்வாறு கூறிய சமாச்சாரத்தை விரிந்த கேள்வியை யுடையவர்களான அவ்வேதியர்கள் வந்து நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களின் சந்நிதானத்திற் சொல்லக் கேள்வியுற்றுச் சத்துராதிகளை ஜெயித்த செந்நிறத்தைக் கொண்ட பிரகாசத்தை யுடைய வேலாயுதத்தைத் தாங்கிய அரசர்களான யாவரும் மனத்தினிடத்துப் பெரிதாக ஒப்பற்ற மயக்கமானது உண்டாகப் பெற்றுறைந்தார்கள்.

 

3088. அவ்வயி னிமையா நாட்டத் தமரருக் கரச ராதி

     செவ்விய மொழியி னோடுஞ் செகதலத் திழிந்து கூறா

     நவ்விமுன் னெதிர்ந்து பேசு நாயக சலாமென் றோதிக்

     கவ்வையங் கடலின் மிக்காங் களிப்புறக் கருதிச் சொல்வார்.

48

      (இ-ள்) அந்தச் சந்தர்ப்பத்தில் மூடி விழியாத கண்களையுடைய தேவர்க ளாகிய மலாயிக்கத்து மார்களுக்கு அதிபதியான ஜிபுரீ லலைகிஸ்ஸலா மவர்கள் யாவற்றிற்கும் முதன்மைய னாகிய ஹக்கு சுபுகானகு வத்த ஆலாவின் செவ்விய வசனத்துடன் இந்தப் பூமியினிடத்திறங்கி வாய் பேசாத மானினது முன்னர் எதிர்த்துப் பேசிய நாயகரான நபிகட் பெருமானே! ழுஅஸ்ஸலாமு அலைக்குழு மென்று சொல்லி ஓசையைக் கொண்ட சமுத்திரத்தைப் பார்க்கிலும் மிகுதியாகிய மகிழ்ச்சியானது பொருந்தும் வண்ணம் சிந்தித்துக் கூறுவார்கள்.

 

3089. பொறைவளை கடற்பா ரெங்கும் போற்றுநும் புதல்வி யுள்ளத்

      துறைகின்ற மகரைக் கேட்டு வருகவென் றும்பர் போற்று

      மிறையவ னருளிச் செய்தா னென்றுரைத் தனரம் மாற்ற

      முறைவழி விளக்கத்தூதர் மொழிந்தனர் பாவைக் கன்றே.

49