பக்கம் எண் :

சீறாப்புராணம்

1140


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) மலைகளையுஞ் சூழ்ந்த சமுத்திரங்களையு முடைய இந்தப் பூமி முழுவதும் துதிக்கா நிற்கும் உங்களது புத்திரியான பாத்திமா றலி யல்லாகு அன்ஹா அவர்களின் இதயத்தின் கண் தங்கிய மகரை இன்னதென்று கேட்டு வருவீராக வென்று தேவர்களாகிய மலாயிக்கத்து மார்கள் புகழுகின்ற யாவற்றிற்கு மிறைவனான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவானவன் கற்பித்தானென்று கூறினார்கள். அந்த வார்த்தையினது ஒழுங்கின் பிரகாரம் பாவையாகிய அந்தப் பாத்திமா றலி யல்லாகு அன்ஹா அவர்களுக்கு விளக்கும் வண்ணம் றசூ லான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் சொன்னார்கள்.

 

3090. மேலவன் வரிசைப் பேறாய் விளம்பிய மாற்றங் கேட்டு

     நூலெனு மருங்குற் பேதை நுவலரு முவகை யெய்தி

     ஞாலமும் விண்ணும் நிற்க நாட்டிய தம்ப மென்னச்

     சீலமுற் றறிவி னோடு மொருமொழி செப்ப லுற்றார்.

50

      (இ-ள்) யாவற்றிற்கும் மேலவனான ஜல்ல ஜலாலகு வத்த ஆலாவானவன் சங்கையினது பேறாக அவ்வாறு கூறிய வார்த்தைகளைப் பஞ்சின் நூலென்று கூறா நிற்கும் இடையையுடைய அந்தப் பாத்திமா றலி யல்லாகு அன்ஹா அவர்கள் கேள்வியுற்றுச் சொல்லுதற் கரிய மகிழ்ச்சியானது அடையப் பெற்றுப் பூலோகமும் வானலோகமும் நிற்கும் வண்ணம் நாட்டிய தம்பத்தை நிகர்த்து நற்குணத்தைப் பொருந்தி அறிவோடும் ஓர் வார்த்தையைச் சொல்லத் தொடங்கினார்கள்.

 

3091. இறுதியிற் பவத்தின் மாத ரென்சபா அத்திலீ டேற்றம்

     பெறமன்றாட் டருள வேண்டிப் பேரருட் கபூல்செய் தானேல்

     உறுதிநன் மகர்பெற் றேனென் றுரைத்தன ருரைத்த மாற்றஞ்

     சிறைகுலாம் வள்ளலாதி திருமுன்விண் ணப்பஞ் செய்தார்.

51

      (இ-ள்) யுகாந்த காலத்தில் பாவத்தை யுடைய மங்கையர்கள் எனது ஷபாஅத்தி லீடேற்றம் பெறும் வண்ணம் எனக்கு அந்த மன்றாட்டத்தைத் தரும்படி விரும்பிப் பெரிய கிருபையைப் பொருந்திக் கொள்வானே யானால் உறுதியைக் கொண்ட நல்ல மகரானது யான் பெற்றே னென்று சொன்னார்கள். அவ்வாறு சொல்லிய வார்த்தையைச் சிறகுக ளானவை பிரகாசியா நிற்கும் வள்ள லாகிய ஜிபுரீ லலைகிஸ்ஸலா மவர்கள் யாவற்றிற்கும் முதன்மைய னான ஜல்ல ஷகுனகு வத்த ஆலாவின் தெய்வீகந் தங்கிய சந்நிதானத்தில் விண்ணப்பஞ் செய்தார்கள்.