பக்கம் எண் :

சீறாப்புராணம்

1141


இரண்டாம் பாகம்
 

3092. நபியைமான் பாத்தி மாவை நரர்புலி யலியை யெந்தப்

     புவியினு முவந்தோர் செய்யும் பிழைபொறுத் திடுவ தாக

     வவியும்பிற் கால மன்றாட் டருளுவ னென்ன வாதி

     கவினுறச் சொன்னான் கேட்டுச் சபுறயீல் கடிதின் வந்தார்.

52

      (இ-ள்) அவ்வாறு விண்ணப்பஞ் செய்ய, யாவற்றிற்கும் முதன்மையனான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவானவன் நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களை, மான் போலும் மருண்ட பார்வையையுடைய பாத்திமா றலி யல்லாகு அன்ஹா அவர்களை, மனுஷியர்களுக்குப் புலியாகிய அலி யிபுனு அபீத்தாலிபு றலியல்லாகு அன்கு அவர்களை, எவ்வுலகத்தி னிடத்தும் விரும்பினவர்க ளியற்றுகின்ற குற்றங்களை மன்னிப்பதாக வேகா நிற்கும் பிற்காலத்தினது மன்றாட்டத்தைக் கொடுப்பேனென்று அழகானது பொருந்தும் வண்ணங் கூறினான். அஃதை ஜிபுரீ லலைகிஸ்ஸலா மவர்கள் கேள்வி யுற்று வேகத்தில் வந்தார்கள்.

 

3093. வானிழிந் தரிய வேத முகம்மதுக் குரைப்ப வன்னோர்

     தேனிமி ரலங்கற் கூந்தற் சேயிழைக் குரைப்பச் செய்தார்

     பானலங் கண்ணார் கேட்டு மகிழ்வொடும் பரிந்திவ் வண்ணந்

     தான்வரைந் தளித்தல் வேண்டு மெற்கெனச் சாற்றி னாரால்.

53

      (இ-ள்) அவ்வாறு தேவ லோகத்தை விட்டு மிறங்கி அருமையான புறுக்கானுல் கரீமென்னும் வேதத்தை யுடைய நாயகம் நபிகட் பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களுக்குச் சொல்ல, அவர்கள் வண்டுக ளானவை சத்தியா நிற்கும் பூ மாலை யணிந்த கூந்தலை யுடைய அந்தப் பாத்திமா றலியல்லாகு அன்ஹா அவர்களுக்குச் சொல்லச் செய்தார்கள். கருங் குவளைப் புஷ்பத்தை நிகர்த்த அழகிய கண்களை யுடைய அவர்கள் கேள்வி யுற்றுச் சந்தோஷத்துடன் அன்பு கூர்ந்து எனக்கு இந்தப்படி எழுதித் தரல் வேண்டுமென்று கேட்டார்கள்.

 

3094. கோதைய ருரைத்த மாற்ற மிஃதெனக் கொண்டல் கூற

     மாதவர்க் குதவி கூறுஞ் சபுறயீல் மகிழ்வி னேகிப்

     பூதலத் துறைந்த யாக்கை யுயிர்தொறும் பொருந்தி வாழு

     மாதிமுன் னுரைத்து நின்றா ரருட்கடை நோக்கி யன்றே.

54

      (இ-ள்) அவர்கள் அவ்வாறு சொல்ல, மேகமாகிய நமது நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் கோதைய ராகிய அந்தப் பாத்திமா றலி யல்லாகு