பக்கம் எண் :

சீறாப்புராணம்

1144


இரண்டாம் பாகம்
 

3100. பாரினின் முதலோன் வாய்மைப் பத்திரம் வரவ ளாகப்

     பேருல கினிலிப் பேறு பெற்றவ ருளரோ வென்ன

     வீரவெண் மடங்க லன்ன விறலுடை வள்ள லோடுஞ்

     சீர்பெறு முதியோ ரியாருஞ் சிலிர்த்தன ருடல மன்றே.

60

 

      (இ-ள்) அவர் அவ்விதம் வாசிக்க, வீரத்தைக் கொண்ட வேலாயுதத்தைத் தாங்கிய சிங்கத்தை நிகர்த்த வலிமையை யுடைய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களோடும் கீர்த்தியைப் பெற்ற முதியோர்களான அசுஹாபிமார்க ளனைவரும் இப் பூமியின் கண் யாவற்றிற்கும் முதன்மைய னான ஜல்ல ஜலாலகு வத்த ஆலாவின் சத்தியத்தைப் பெற்ற கடித மானது வர, இடத்தைக் கொண்ட பெரிய இந்த வுலகத்தில் இப் பதவியை யுடைந்தவர்க ளுள்ளரா? இல்ல ரென்று சொல்லித் தங்களின் தேகங்கள் சிலிர்க்கப் பெற்றார்கள்.

 

3101. செவியகங் குளிரப் பொன்னாற் றீட்டுபத் திரத்தை யேந்தி

     யவையகம் விடுத்து பாத்தி மாமணி மனையை நண்ணிக்

     கவினுறு மயிலே யென்ன வாசித்துக் காண்பித் தன்பி

     னவமிவை யென்னப் போற்றிச் சிலமொழி நவில லுற்றார்.

61

 

     (இ-ள்) அவ்வாறு சிலிர்க்கப் பெற்றுக் காதுகளும் மனமுங் குளிரும் வண்ணம் பொன்னினா லெழுதப் பட்ட அந்தக் கடிதத்தைத் தாங்கித் தாங்கள் தங்கியிருந்த அந்தச் சபையை விட்டும் அப் பாத்திமா றலியல்லாகு அன்ஹா அவர்களின் அழகிய வீட்டிற் போய்ச் சேர்ந்து அழகானது பொருந்தப் பெற்ற மயில் போலுஞ் சாயலை யுடையவர்களே! என்று சொல்லி அஃதைப் படித்துக் காட்டி அன்போடும் இவை ஆச்சரிய மான காரிய மென்று துதித்துச் சில வார்த்தைகள் சொல்ல ஆரம்பித்தார்கள்.

 

3102. வரத்தினி லுயர்ந்த பேறே மகுசறு வெளியி லென்றன்

     கரத்தினி லளிக்க வேண்டுங் காரண மதனா லீதை

     யொருத்தருந் தீண்டா வண்ண முயிரென வோம்பி யோர்பா

     லிருத்துமென் றிறசூ லுல்லா விளந்தளிர்க் கையி லீந்தார்.

62

 

      (இ-ள்) வரத்தினா லோங்கப் பட்ட பதவியைக் கொண்ட பாத்திமாவே! இந்தக் கடிதத்தை மகுஷறு வெளியில் எனது கையில் தர வேண்டுங் காரணத்தினால் ஒருவருந் தொடாதபடிப் பிராணனைப் போலுங் காப்பாற்றி ஓரிடத்தில் இருக்க வையுங்க ளென்று ஹக்கு சுபுகானகு வத்த ஆலாவினது றசூ லாகிய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா சல்லல்லாகு அலைகி