பக்கம் எண் :

சீறாப்புராணம்

1145


வசல

இரண்டாம் பாகம்
 

வசல்ல மவர்கள் அஃதை இளந்தளிர்க் கொப்பான அவர்களின் கரத்தில் கொடுத்தார்கள்.

 

3103. அந்தநன் மாற்றங் கேட்ட வரிவையர்க் கமுத மன்னார்

     செந்தளிர்க் கரத்தி னேந்திச் சென்னிமேல் விழிமேற் கொண்டு

     மந்திரப் பொருளைச் செம்பொன் மணிச்செப்பி னடைத்துக் கிட்டாப்

     புந்தியு முயிரு மென்னப் போற்றுதல் பொருந்தி னாரால்.

63

 

      (இ-ள்) நன்மை பொருந்திய அந்த வார்த்தைகளைக் கேள்வியுற்ற பெண்களுக்கு அமுதத்தை நிகர்த்தவர்க ளான அந்தப் பாத்திமா றலி யல்லாகு அன்ஹா அவர்கள் வேதார்த்த மாகிய அஃதைச் செந்நிறத்தைக் கொண்ட தங்களின் கைகளால் தாங்கிச் சிரத்தின் மீதுங் கண்களின் மீதுங் கொண்டு சிவந்த பொன்னினாற் செய்யப்பட்ட இரத்தினச் செப்பில் வைத்து மூடிக் கிடைக்காத அறிவையும் பிராணனையும் போலக் காப்பதைப் பொருந்தினார்கள்.

 

3104. பரம்பொருள் விருப்பி னீந்த பத்திர மகள்கைக் கீந்து

     வரம்பெறும் வள்ளல் பள்ளி வாயலி னவையி னண்ணி

     யரம்பொருந் திலங்கும் வெள்வே லபூபக்கர் முதலா வுள்ள

     தரம்பெறுந் தோழர்க் கெல்லா மினியவை சாற்று வாரால்.

64

 

      (இ-ள்) பழமையைக் கொண்ட வத்து வாகிய ஜல்ல ஜலாலகு வத்த ஆலாவானவன் அவ்வாறு ஆசையோடுங் கொடுத்த அந்தக் கடிதத்தை வரத்தைப் பெற்ற வள்ளலான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் தங்களின் புத்திரியாகிய அந்தப் பாத்திமா றலி யல்லாகு அன்ஹா அவர்களின் கைகளிற் கொடுத்துப் பள்ளி வாயிலிலிருந்த சபையின் கண் வந்து சேர்ந்து அரமானது பொருந்துகின்ற பிரகாசியா நிற்கும் வெள்ளிய வேலாயுதத்தையுடைய அபூபக்கர் சித்தீகு றலியல்லாகு அன்கு முதலா யுள்ள வலிமையைப் பெற்ற மற்ற தோழர்களான அசுஹாபிமார்கள் யாவர்களுக்கும் இனிமையை யுடைய இச் சமாச்சாரங்களைச் சொல்லுவார்கள்.

 

3105. மதுரமென் கனிக்குஞ் சீர்த்தி வாளலி தமக்கு மேன்மை

     முதலவன் மணநிக் காகு முடித்தன னதனை யெந்தப்

     பதியினுஞ் சிறப்பு வாய்ப்பப் பற்றல ரொடுங்க மேலு

     மிதமுற வியற்றற் கேற்ற யாவையு மியற்று மென்றார்.

65

 

      (இ-ள்) இனிமையைக் கொண்ட மெல்லிய கனியாகிய காத்தூனே ஜன்னத் பீவி பாத்திமா றலி யல்லாகு அன்ஹா அவர்களுக்கும் கீர்த்தியைப் பெற்ற வாளாயுதத்தை யுடைய அலி