|
இரண்டாம் பாகம்
(இ-ள்) அன்றியும், முற்றங்க ளெல்லாவற்றிலும் பிரகாசிக்கும் வண்ணம் செழிய புஷ்பங்களினா
லான பந்தற்களைப் போடுங்கள். நலத்தைக் கொண்ட வத்திரத்தினால் விமானங்களும்
தோரணங்களும் நாட்டுங்கள். மலையைப் போன்ற வீடுகளினிடங்கள் தோறும் கொடிகளைக்
கட்டுங்கள். அழகைக் கொண்ட நன்மை பொருந்திய இந்தத் திரு மதீனமா நகரத்தினது
சுவர்களெல்லாவற்றிலும் கோலங்களை அலங்காரமாய்ப் போடுங்கள்.
3115.
மதுர முக்கனி தேனெய்பா றயிரொடும்
வழங்கிப்
புதுவி ருந்தினர்க்
கிடுமின்க ளெனப்பல போற்றி
முதிரு நன்னகர்த் தெருத்தொறு
முகிலிடை முழங்கி
யதிரும் பேரொலி யிடியெனக்
கடிமுர சறைந்தார்.
75
(இ-ள்) அன்றியும்,
புதிய விருந்தாளிகளுக்கு இனிமையைக் கொண்ட வாழை, பலா மா வென்னும் முப் பழங்களையும் தேனையும்,
நெய்யையும், பாலையும், தயிரோடும், வழங்கிக் கொடுங்க ளென்று பல துதித்து முதிர்ந்த நன்மை
பொருந்திய அந்தத் திரு மதீனமா நகரத்தினது வீதிக ளெல்லாவற்றிலும் மேகத்தினிடத்துச் சத்தித்து
ஒலிக்கா நிற்கும் பெரிய ஓசையைக் கொண்ட இடியைப் போலும் அந்த மண முரசங்களையடித்தார்கள்.
3116.
முரச றைந்துவள் ளுவர்தெருத்
தலைதொறு மொழிந்த
வுரைசெ விப்புக நகரவர்
பலருமுள் ளுவந்து
வரைசெய் மாடமுங் கூடமு
மனைகளு மறுகும்
விரைசெ யும்படி புதுக்கிடத்
துணிந்தனர் விரைவின்.
76
(இ-ள்) அவ்வாறு மண முரசங்களை
அடித்த புரோகிதர்களாகிய அவர்கள் வீதிகளி னிடங்க ளெல்லாவற்றிலுங் கூறிய வார்த்தைக ளானவை
காதுகளில் நுழையவே, அந்தத் திரு மதீனமா நகரத்தை யுடையவர்களான பலரும் மனப் பிரிய முற்று
மலையைப் போலுஞ் செய்த மாடங்களும் கூடங்களும் மனைகளும் தெருக்களும் பரிமளத்தைச் செய்யும் வண்ணம்
விரைவில் புதுப்பிக்க முயன்றார்கள்.
3117.
பொழித்த பொற்பொறிச்
சுணங்கலர் பூண்முலைக் கணிந்து
வழிந்த சந்தமுங் கூந்தலிற்
கழித்தெறி மலரு
மழுந்து கூடலி லூடலிற் களைந்தபொன்
னணியு
மெழுந்து கட்பட லந்தர வாரிநின்
றெறிவார்.
77
(இ-ள்) அவ்வாறு முயன்று
மாதர்கள் பொன் போலும் புள்ளிகளைப் பொழிந்த தேம லானது விரியப் பெற்ற ஆபரணங்களைத் தாங்கிய
ஸ்தனங்களுக்குத் தரித்துச் சிந்திய
|