பக்கம் எண் :

சீறாப்புராணம்

1156


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அன்றியும், பெருமை பொருந்திய அந்தத் திரு மதீனமா நகரம், செந்நிறத்தைக் கொண்ட பிரகாசத்தைச் சொரிகின்ற இரத்தினங்களை விதைத்து எழுதுகின்ற சித்திரங்களினாலும், பரிமளத்தைப் பெற்ற கத்தூரி வாசனையானது பரிமளிப்பதினாலும், துகிற் கொடிகளினது சோலைகளினாலும் ஆச்சரியம் ஆச்சரியமாகச் செய்யப்பட்ட தோரணக் கூட்டங்களின் அதிசயங்களினாலும் அஃதல்லாத வேறோர் நகரத்தைப் போன் றிருந்தது.

 

3138. மின்னி னந்திரு வில்லொடு முகிலொடும் விரைவிற்

     பொன்னந் தாமரை வாவியிற் புகுந்தெனப் புகுந்து

     மன்னு விற்புரு வக்கருங் குழற்கொடி மருங்கா

     ரின்ன லந்தர மூழ்குவ ராடுவ ரெங்கும்.

98

      (இ-ள்) அன்றியும், வில்லைப் போலும் பொருந்திய புருவத்தையுங் கரிய கூந்தலையு முடைய கொடியைப் போன்ற இடையை யுடைய மாதர்கள் எவ் விடங்களிலும் மின்னலினது கூட்டங்கள் அழகிய வானவில்லுடனும் மேகத் துடனும் வேகத்தில் பொன்னை நிகர்த்த அழகிய தாமரையை யுடைய தடாகத்தின் கண் நுழைந்ததை யொத்து நுழைந்து இனிய நன்மையான துண்டாகும் வண்ணம் மூழ்கி ஸ்நானஞ் செய்வார்கள்.

 

3139. இலகு பொன்னொடு வெள்ளிவெண் பானைக ளேற்றி

     நிலவு கான்றெனும் பாலினில் வாலரி நிறைத்திவ்

     வுலகி னூன்முறை யடுதொழிற் புதுமண மூட்டி

     யலகி லாப்பெரு நகர்தொறு மமலைக ளடுவார்.

99

      (இ-ள்) அன்றியும், கணக் கற்ற பெருமையை யுடைய அந்தத் திரு மதீனமா நகரத்தி னிடங்க ளெல்லாவற்றிலும் பிரகாசியா நிற்கும் பொற் பானைகளோடு வெள்ளியினாற் செய்யப்பட்ட வெண்ணிறத்தைக் கொண்ட பானைகளை அடுப்புகளி லேற்றி நிலவானது பிரகாசித்த தென்று சொல்லும் பாலில் தூய் தாகிய அரிசியை நிறையச் செய்து இப் பூமியிலுள்ள பாக சாத்திர ஒழுங்குடன் சமைக்கின்ற தொழிலினது புதிய வாசனைகளை யூட்டிச் சோறுகள் சமைப்பார்கள்.

 

3140. கனியி னுஞ்செழுங் காயினும் பூவினுங் கலவாப்

     புனித நெய்யினில் வெண்மலர்க் கரியபூங் குழலார்

     சுனித மாகிநற் பாகொடு மறுசுவை தூங்க

     வினிமை கூர்தர மணத்தொடுங் கறிசமைத் திடுவார்.

100

      (இ-ள்) அன்றியும், வெள்ளிய புஷ்பங்களைச் சூடிய கரு நிறத்தைக் கொண்ட அழகிய கூந்தலை யுடைய மாதர்கள்