பக்கம் எண் :

சீறாப்புராணம்

1160


இரண்டாம் பாகம்
 

3150. புகரி னன்னிரி யாசங்கண் முதலிய புகைத்துப்

     பகரு நன்மறை முதியவர் பலபல திரளா

     நரக மெங்கணும் வேதங்க ளோதிய நாத

     மகர வாருதி திரையொலிக் கலிப்பினை மலைக்கும்.

110

      (இ-ள்) அன்றியும், ஓதா நிற்கும் நன்மை பொருந்திய வேதத்தினது முதியோர்கள் பற்பல கூட்டமாகக் குற்ற மில்லாத நல்ல நிரியாசங்கள் முதலியவைகளைப் புகைத்து அந்தத் திரு மதீனமா நகரத்தினது இடங்க ளெல்லாவற்றிலும் வேதங்களையோதிய ஓசை யானது, சுறா மீன்களையும் அலைகளையுமுடைய சமுத்திரத்தின் சத்தத்தினது எழுச்சியை மலைக்கா நிற்கும்.

 

3151. கலிக்கு மாமறை முதல்வனிக் காகினைக் கருதி

     யலிக்கும் பாவைக்கு முடித்திட வகுமது மகிழச்

     சிலைக்கை வீரர்க ணகரத்தி னியற்றிய சிறப்பை

     யொலிக்கு மாகடற புவியினி லெவரெடுத் துரைப்பார்.

111

      (இ-ள்) அன்றியும், ஓங்கா நிற்கும் பெருமை பொருந்திய வேதத்தினது முதன்மையனான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவானவன் அலி யிபுனு அபீத்தாலிபு றலி யல்லாகு அன்கு அவர்களுக்கும் பாவையாகிய காத்தூனே ஜன்னத் பீவி பாத்திமா றலி யல்லாகு அன்ஹா அவர்களுக்கும் விவாகத்தைச் சிந்தித்து நிறைவேற்றவும், அஹ்மதென்னுந் திரு நாமத்தையுடைய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் சந்தோஷிக்கவும், கோதண்டத்தைத் தாங்கிய கைகளையுடைய வீரர்கள் அந்தத் திரு மதீனமா நகரத்தின் கண் செய்த சிறப்பைச் சத்திக்கா நிற்கும் பெரிய சமுத்திரத்தையுடைய இந்தப் பூமியி னிடத்து எடுத்துச் சொல்லுவோர் யாவர்? ஒருவருமில்லர்.

 

எழுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

 

3152. மரைமல ரெகின மிரவியின் சிரசின்

          மதிவதிந் தெனத்தனி வயங்கத்

     திரைமணி கொழிக்கும் வாவிசூழ் மதீனத்

          திருநகர் சிறப்பியற் றியபின்

     றருவெனு நபியு மூவரும் பெருகு

          சதுமறைத் தலைவருந் திரண்டு

     வரியளி முரலுஞ் செழுந்தொடைத் திரடோண்

          மன்னவ ரலிமனை புகுந்தார்.

112

      (இ-ள்) அன்னப் பட்சிகள் தாமரை மலரின் கண் சூரியனது தலையின் மீது சந்திர னானது தங்கினதை நிகர்த்து ஒப்பறப்